பக்கம்:தமிழ்க் காதல்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

தமிழ்க் காதல்



மனைவி கணவன் வரக்காணேன் என்று ஏங்கி விம்மி வெய்துயிர்த்து . விழவில்லை; அவர் குறித்த பருவம் இதுதானோ அனைய கொல் என்று அடக்கமாக வினவுகின்றாள் தலைவி. எனவே சுந்தரத்தனார் புனைந்த அகப்பெருமக்கள் உரிய அறிவும் ஒத்த உணர்வும் அரிய - அடக்கமும் வாய்ந்தவர்கள் என்று காண்கின்றோம்.

16. கபிலர்

சங்கப் புலவர்களுள் தலைசான்றிவர் கபிலர். புதுக்கூர்மையும் பாடும் வளமும் நிறைந்தவர். யாரினும் பாட்டெண்ணிக்கை மிகப் பாடியவர். யாரினும் சிறந்த வள்ளல் பாரியின் வாழ்க்கைச் தோழர் இவர்தம் ஓங்குயர் சிறப்புக்குப் பாடும் வன்மை ஒரு காரணம், பாரியின் உயிர்த்தோழமையும் ஒரு காரணம். சங்கச் சான்றோர் பலரின் வரலாற்றை அறியோம். ஒரு சிலரைப்பற்றி ஒரு சில குறிப்புக்கள் காணக்கிடக்கின்றன. கபிலர் ஒருவருக்குத் தான் நிரம்ப வாழ்க்கைக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. பலரைப் பாடிய பெருமையோடு,பலரால் பாடப்பெற்ற பெருமையும் உடையவர் கபிலர், புலவர் மதித்த புலமைப் பெருமகன். 'பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்” என்பது (அகம் 78) நக்கீரர் பாராட்டு. "செறுத்த் செய்யுள் செய் செந்நா உடைய கபிலன்” என்பது (புறம்.53) இளங்கீரனார் புகழுரை"புலன் அழுக்கற்ற அந்தணாளன்” (புறம்.. 126) என்பது நப்பசலையார் மதிப்புரை. கபிலரின் செய்யுட்களை ஆராயுமுன், அவர்தம் நல்லிசை நம்மை ஆட்கொண்டு விடுகின்றது. அவர் பாடிய அகங்கள் 197, பத்துப்பாட்டிலும் பரிபாடல் ஒழிந்த ஏழு தொகையிலும் இவர் பாடல்கள் உள 182 களவிற்கும், 12 கற்பிற்கும், 3 கைக்கிளைக்கும் உரியவை.

வெளவிக் கொளல்

கலித்தொகை 32 ஆம் பாடலைப் பெருந்திணைத் துறையாகக் கொள்வர் நச்சினார்க்கினியரும் பிறரும். இப்பாட்டிற் தலைமக்கள் கூலியாட்கள் ஆதலின், பெருந்திணை என்பது அன்னவர் முடிபு. விரும்பாதவளை வலிந்து புணர்ந்ததாகக் கொண்டு, “மிக்க காமத்து மிடல்” என்னும் துறையாம் என்பர்.

மையில் மதியின் விளங்கு முகத்தாரை

வெளவிக் கொளலும் அறனெனக் கண்டன்று

என்ற அடிகளை இன்னவர் சான்றாகக் காட்டுவர். இவையெல்லாம் பிழைகள் என்பதனை நாலாவது இயலின்கண் பெருந்திணை யாராய்ச்சியிற் கற்றீர்கள். நடைமுறைச் சொற்கள் காதலர் வாய்ப்படும்போது நிலைமாறுகின்றன. மென்சொற்கள் ஆற்றல் பெறுகின்றன. வன்சொற்கள் புணர்ச்சியில் மெலிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/319&oldid=1394761" இலிருந்து மீள்விக்கப்பட்டது