பக்கம்:தமிழ்க் காதல்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

311



அவருடைய நட்பே' (நற். 309). காலம் நீடினும் வரைவான்; அவன் நட்பில் எனக்கு உறுதியுண்டு எனத் தலைவி துணிவு கூறினாள் தோழிக்கு.

அம்ம வாழி தோழி நம்மலை
நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள்
கொங்குண்.வண்டிற் பெயர்ந்து புறமாறிநின்
வன்புடை விறற்கவின் கொண்ட்

அன்பி லாளன் வந்தனன் இனியே (ஐங். 226)

பாடலைப் பார்த்தால் மருதத்திணைபோல் தோன்றவில்லையே? காந்தட்பூவில் தேனையுண்ட வண்டுபோல அன்புமாறிய தலைவன் என்று உவமை வருதலின், கற்பியலில் தலைவனது பரத்தமையைச் சுட்டுவதுபோல் படவில்லையா? எனினும் இஃது ஒரு களவுப்பாட்டு எனவும், வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் நாட்கடந்து வந்த போது தோழி தலைமகட்குக் கூறுவது எனவும் எழுதிய துறையால் அறியலாம். மேலை எடுத்துக்காட்டுக்களால் நாம் காணக்கிடக்கு ம் கபிலரின்திறம் யாது? (ஐங். 215, 223, 234, 235, கலி, 44, 53; குறுந் 38) ஆகிய அகப்பாடல்களையும் உடன் வைத்து ஒர்வோமாயின், பாலை நெய்தல் முதலான உரிப்பொருள் களைக் களவுத்துறையில் பாட வல்லவர் என்பதும், களவியலில் கற்பியல் உணர்ச்சிகளைக் காட்டவல்லவர் என்பது விளங்கும்.

பெண்களின் ஒண்மை

கபிலரின் அகப்பெண்கள் ஒட்பினர், துணிவினர். இளையோரின் காமக் கதிர்ப்பையும் அறிவொளியையும் கண்டு பிடித்துப் பாடும் ஆர்வந்தான் சங்கப்புலவருக்கு என்னே! என்னே!பழுத்த மொழிமையும் புலமையும் வயதும் உடைய ஒருவர் அவற்றையெல்லாம் களவுக் காமம் பாடுவதற்கு, சிறுமிகளின் காதற் குறும்பைப் புலப்படுத்துதற்குப் பயன்படுத்துவதை இடைக் காலத்தவரும் இன்றுள்ளவரும் ஒப்புவரோ? வீண் என்று கருதார்கொல் சங்க காலம் இயற்கைக் காலம், இவ்வுலக வாழ்வை மதித்துப் போற்றிய இன்பக்காலம். ஆதலின் காதல் பாடுவதை வாழ்வு பாடுவதாகவும், காதற் பெண்களைப் பாடுவதை நல்ல இல்லறத்தாயார்களைப் பாடுவதாகவும் சங்கச் சான்றோர் கருதினர். கபிலர் யாத்த பாட்டுக்கள் 235.இவற்றுள் 38 புறத்திணையன; எஞ்சிய 197 பாடல்கள் அகத்திணையன. ஆறில் ஐந்து கூறு அகம் எனின், சங்கத்தின் இலக்கியப் போக்கு அகக் காதல் பாடுவதே என்று தெளியலாம்.

கார்காலத்தின் நள்ளிரவு. மழை பெய்து ஒய்ந்தது. அன்னை துரங்குகின்றாள். தந்தையும் அன்றிரவு வீட்டில் இருக்கின்றான். வீட்டின் விளக்கு நின்று விட்டது. மராமரத்திலிருந்து கோட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/324&oldid=1394769" இலிருந்து மீள்விக்கப்பட்டது