பக்கம்:தமிழ்க் காதல்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

தமிழ்க் காதல்



படைத்து மொழிவதாயினும்,தோழி கூறும் பொய்க் காதல் அகத்திணைக்கண் வரலாமா? அன்புடையோர் அன்புடை யோரிடத்துக் கூறும் பொய் வரலாம் என்பது அகத்தினை, சான்றோர் துணிபு. பொய் என்பதைத் தோழியும் அறிவாள், கேட்கும் தலைவியும் உணர்வாள்.ஒரு நற்பயன் நோக்கிக் கையாளும் , மறைமுறை என்றே இருவரும் பொருள் கொள்வர்.

அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின்

வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப (தொல். 163)

அன்பினை அடிப்படையாகக் கொண்ட அகப்பொருளுக்குத் துணை செய்யுமாயின், உலகியல் அறங்களுக்கு மாறுபட்டனவும் இலக்கிய வழக்காக வரலாம், பிழையில்லை என்று இலக்கண செய்வர் தொல்காப்பியர். இவ்விலக்கணம் கவிதைக் கலையின் கிரேக்கப் பேராசிரியர் அரித்தாட்டலுக்கும் உடன்பாடே! [1] அகத்திணை இலக்கியத்தை மரபுநிலை திரியாமல் கற்பனைப் படுத்தலாம். வளர்க்கலாம். சுவைப்படுத்தலாம் என்பதற்குத் தொல் காப்பிய விதியும் கபிலரின் கலிப்பாட்டும் சான்றாகின்றன.

17. கயமனார்

இவர் பாடிய 22 அகங்களுள் 21 கள்வின் பாலன. அவற்றுள் 20 உடன்போக்குப் பற்றியன. அவற்றுள்ளும் 17 செவிலி அல்லது நற்றாய் கூற்றாவன. அகத்திணை தனிநிலையமைப்பு உடையது ஆதலின், மகளது உடன்போக்கு என்னும் ஒரு துறையில் பதினேழு தாயர்களின் மனப்பான்மைகளைக் கயமனார் காட்ட முயல்கின்றார். "உள் உறுப்புக்கள் வனப்புற்றன, குமரிப்பருவத்து நீ புறத்துப் போகலாமா? என்று தான் இயல்பாகக் கூறினேன். தாய் தன் களவை அறிந்துவிட்டாளோ என அஞ்சிப் போகிவிட்டாள்.” (அகம்:7) என்பது ஒரு தாயின் புலம்பல். பிரிந்த நாள்முதல் உறவுடைய எங்களையும் இல்லத்தையும்துறந்து புதியவனை நம்பிச் சுரத்தின்வழி செல்லத் துணிந்தாளே இவள் அடிகள் பாலை நிலத்தில் பாவுமா? (அகம், 17) என்பது ஒரு தாயின் ஏக்கம். மெல்லிய மகளின் கூந்தற் கற்றையை ஒரு கையாற் பற்றிக் கொண்டு முதுகு அவளுக்கு இல்லை என்னும்படி மற்றொரு கையால் கோல்கொண்டு நொறுக்கினேன். என் கைகள் அன்னி என்பான் வெட்டிய புன்னைமரம் போலத் தொலைந்தொழிக. (அகம். 145) என்பது ஒரு தாயின் தற்சாபம். இங்ங்னமாகப் பல்வேறு தாய் உள்ளங்களைப் புலப்படுத்துவர் கயமனார். -

1.


  1. Aristotle: On the Art of Poetry. p 87. w “As to the criticisms relating to the poet's art itself. Any impossibilities there may be in his descriptions of things are faults. But from another point of view they are justifiable if they serve the end of poetry itself, if they make the effect of some portion of the work more astounding.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/327&oldid=1394776" இலிருந்து மீள்விக்கப்பட்டது