பக்கம்:தமிழ்க் காதல்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

319



எயிற்றியார்தம் ஏழு செய்யுட்களுக்கு (கற்பு6; களவு 1) கூற்றாவாள் தலைவி. “ஆனால் எறிதரும் (வாடையொடு நோனேன் தோழி என் தனிமை யானே’ (அகம், 294) என்று காலத்தை எதிர்க்கமாட்டாத தன் நிலையை உணர்ந்து தோழிக்கும் உணர்த்துகின்றாள். குன்றையும் குலுக்கும் அவ்வாடைஎனக்கேதான் வந்ததோ? அவர் இருக்கும் இடத்திற்கும் இக்கொடுமையோடு செல்லாதோ? என்று வினவும்போது (அகம். 163) அவளது ஆற்றாமையை நாமும் உணர்கிறோம்.

காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்

நீர்வார் கண்ணிற் கருவிளை மலர (அகம். 294)

கூதிர்க்காலத்துக் கருவிளைப்பூ மலருகின்றது. மழைத்துளியை ஏற்று அம்ம்லர் இடையறாது நீரை வடிக்கின்றது. காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் அழுது நீர்வடிக்கும் கண்போல என்று வாடைக்கு வருந்தும் தலைமகள் கூறினாள் என்றால், தன்னை இலக்கியமாக வைத்துத்தான் அவ்வுவமை கூறுகின்றாள் என்பதை நாம் கண்டுகொள்கின்றோம். எயிற்றியாரை வாட்ை பாடிய புலவர் என்று போற்றுகின்றோம்.

20. காவல்முல்லைப் பூதனார்

இவர் முற்றும் பாலைப்புலவர். இயற்றிய அகப்பாக்கள் எட்டும் கற்பியலிற் பாலைத்திணையாவன. நீர்வறட்சி, பேய்த்தேர், விலங்குகளின் உயக்கம், நிலத்தின் வெருவரு தோற்றம் ஆய பாலையியல்புகளை வழக்கம்போல் பாடியுள்ளார் பூதனார். பாலை நிலத்துப் பல இன்மைகளில் நீரின்மையை மட்டும் தனித்துச் சுட்டி இலக்கிய வளம்படப் புனைந்துள்ளனர்.

பூதனாரின் அகத்தினைத் தலைவி தானே ஆறுதலடைபவள், ஆற்றப்படத்தக்கவளாக விளங்குகின்றாள். தலைவன் சென்ற வழி புலி வழங்கும் இடமாயிற்றே எனத் தலைவி கவலும்போது, இல்ல்ை என்று ஆற்றுவளே தோழி. "நீயும் உடன் வருவதாயின் வருக. செல்லும் சுரநெறியில் வானம் மின்னும்,மேகம் துளிர்த்துப் பெருமழை பெய்யும், மகளிர் அணியும் பொன்னணிகள் போலக் குமிழம் பூக்கள் மெத்தென வீழ்ந்து கிடக்கும்” என்று தலைவன் இனிதாக மொழிந்த பழஞ்சொற்களை (நற். 274) நினைவுபடுத்தவே தலைவி ஆறுதல்படுகின்றாள். தலைவன் தன்னைப் பிரிதற்குக் காரணம் கடமையுணர்வு; தாங்க வேண்டுவோரைத் தாங்கி உற்றார்க்கு உதவும் அருளுள்ளம் எனத் தானே நினைந்து (அகம். 151)ஆறுகின்றாள். தலைவன் அகன்ற பின்னர் ஒருவாறு தலைவி ஆற்றியிருந்தாலும், அவன் புறப்படுமுன்னர் பாலை வழியாயிற்றே என மிகவும் பேதுறுகின்றனள், பலவாறு புலம்புகின்றாள். அன்பற்ற இடையர்கள் தாயினின்றும் பிரித்து வைத்த கன்றுபோலத் தலைவனோடு என்றும் உடனுறைய அவாவுகின்றாள்:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/332&oldid=1394783" இலிருந்து மீள்விக்கப்பட்டது