பக்கம்:தமிழ்க் காதல்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

தமிழ்க் காதல்



பண்பில் கோவலர் தாய்பிரித்து யாத்த
நெஞ்சமர் குழவி போல நொந்துநொந்து

இன்னா மொழிதும் என்ப (அகம். 293)

மூன்றாம் பதின்மர்

21. குடவாயில் கீரத்தனார்


இப்புலவர் களவில் ஐந்தும் கற்பில் பன்னிரண்டும் ஆக 17 அகச் செய்யுட்களின் ஆசிரியர். பாலையே இவர் மிகுதியும் பாடிய உரிப்பொருள். எட்டுப் பாடல்களில் உவமையாகவோ புனைவாகவோ வரலாறுகள் இடம் பெறக் காணுதும். தன் ஊராகிய குடவாயிலைத் தலைவிக்கும், தன் ஊர் அகழியிற் பூத்த நீலமலர்களை அவளது கண்ணுக்கும் உவமங்கள் செய்வர்.

கீரத்தனாரின் அகத்தாய் மகளை இற்செறிக்கும் மனப் பான்மையினள். குமரிமையுள்ள நாள் முதல் கூர்ந்து நோக்கி வருபவள். நேற்றுக்கூட அவள் செயலை ஐயப்பட்டேன்; அறியாமை யினால் வீட்டில் அடையாது விட்டுவிட்டேன் (அகம் 315 என்பது ஒரு தாயின் கவலை. நாள்தோறும் நெய்தற் பூவைப் பறித்து வரும்படி அன்னை ஏவுதலுண்டு. சிறிது ஐயம் தோன்றியபின், பூக்கொய்ய ஏவ்வில்லையாம் (நற். 27) - w

திண்டேர்ப் பொறையன் தொண்டி யன்னவெம்

ஒண்டொடி ஞெமுக்கா தீமோ (அகம். 90)

புணர்ச்சியில் என் கைவளையலை அழுந்த அமுக்காதே. அமுக்கின் கையில் தழும்பு படும். காரணமின்றியும் சினக்கும் என் அன்னை கைத்தழும்பு கண்டால் அரியகாவல் புரிவாள்' என்ற தோழியின் கூற்றால், கீரத்தனார் புனையும் தாய்ப் பண்பினை அறியலாம். -

உடன் போக்குகள்

- தலைவியர் களவிலும் கற்பிலும் உடன்போக்கை நாடுபவர்களாகப் புலவரின் பல பாடல்கள் காட்டுகின்றன. தலைவர்களும் அத்தகைய துணைப்போக்கினை ஒருவாறு உடன்படக் காண்கின்றோம். உடன் கொண்டு செல்வதாக ஆசைகாட்டி ஏய்த்த சில தலைவர்களும்உளர். சின்னாள் கழியட்டும்: செல்லும் வழி மழை பெய்து குளிரட்டும் என்று விழைவுகாட்டிப் பொய்த்தாலும் அவர் போகும்நெறி காடு தழைத்து இனிதாகுக என்பது (அகம். 345) ஏமாறிய ஒரு தலைவியின் வாழ்த்து. உடனழைத்துச் செல்வதற்கு ஒருப்பட்டான். ("செல்வாம் தோழி நல்கினர் நமரே” (குறுந் 369) என்பது ஒரு தோழியின் உண்மைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/333&oldid=1394789" இலிருந்து மீள்விக்கப்பட்டது