பக்கம்:தமிழ்க் காதல்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

தமிழ்க் காதல்



ஏன் பாடவில்லை? காதலர்களுக்குக் களவில் கடமை யாதும் இல்லை. வரைவு நிகழ்ந்து இல்லறத்தார் ஆவதே அன்னவர்தம் சமுதாயக் கடன் ஆதலின் களவுக் காதலர்தம் உடன்போக்கு பாலையாகும்; கற்பு நோக்கு இன்றிமையாததாகும். இல்லறத் காதலர்க்குக் கடமைகள் பலவுள. அவற்றைத் தலைவி இல்லில் இருந்து ஆற்ற வேண்டும். அதற்குத் தலைவன் புறம்போய் வினைசெய்து பொருளிட்ட வேண்டும். இல்லறத்தார் உடன்போக்கு புறம் போக்காய்க் கடன் போக்காய் விடும். அங்ங்னம் உடன் போகின் .குறிஞ்சியாவதல்லது լ.1րI 35} ն) யாகாது تولي ليكي. பிரிவுணர்ச்சியின்மையின், உடன்போய் ஊரில் தங்கிக் குடியிருந்து இல்லறம் நடத்திக் கொண்டிருப்பின், அதுவே இல்லமாய் விடுதலின், உடன்போக்கு என்றபேச்சிற்கு இடமில்லை. ஆதலின் கற்புத் தலைவி உடன்போயதாக அகப்புலவர் எவரும் பாட்டுத் தொடுக்கவில்லை. அகத்திணையின் இயல்பு நோக்கின், அங்ங்னம் தொடுக்க வேண்டியதும் இல்லை.

22. குன்றியனார்

இப்புலவர் பாடிய பத்தும் அகமே. முல்லைத்திணை நீங்கிய எல்லாத் திணைகளிலும் இவர் பாடல்கள் உள. களவுப் பாடல்கள் ஆறும் வரைவை நோக்கியன. பொருளுக்கும் ஏற்ற காலப் புனைவு செய்வதில் வல்லவர் குன்றியனார். - ... - -

தலைவன் களவை நீட்டிக்க விழைபவன், விரைந்து மணக்கும் முயற்சியை எண்ணாதவன். தலைவியும் தோழியுமோ மாறான க்ருத்தினர். இரவுக்குறி வருகை எதிரிகளுக்கு உவகையாகும் (குறுந் 336) என்று குறிப்பிற் புலப்படுத்துகின்றாள் தோழி. தலைவன் உயிர்க்கு ஏதும் ஊறு ஏற்பட்டால், அலர் தூற்றும் ஊரார்க்குக் கொண்டாட்டமாகும் என்பது அவள் குறிப்பு.

யானும் காதலென் யாயும்நனி வெய்யள்
எந்தையும் கொடீஇயர் வேண்டும்

அம்பல் ஊரும் அவனொடு மொழிமே (குறுந். 51)

தலைவியை அவனுக்கே வரிந்து கொடுக்க இயைபுடையார் எல்லா ரும் உடன்படும்போது, அவன் வரைவு நீட்டிக்க வேண்டியதில்லை என் தோழி மொழிவது காண்க. -

வரைவு நீளுதலால் தலைவியின் மேனி மெலிகின்றது, கைவளைகள் சேர்கின்றன, இதனைத் தாய் அறிந்தாள் என்னாகும் எனத் தலைவி அஞ்சுவள். முருகனால் வந்த நோய் என்று கூறுவதைப் பண்பு அன்று எனவும், பழி எனவும் கருதுவாள், தோழி ஒட்பம் உடையவளாதலின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/335&oldid=1394791" இலிருந்து மீள்விக்கப்பட்டது