பக்கம்:தமிழ்க் காதல்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

323



துறைவன் வாரா தமையினும் அமைக

சிறியவும் உளஈண்டு விலைஞர்கை வளையே (குறுந் 17)

தலைவன் மணக்க வாராவிட்டால் என்ன? அன்னைக்குக் கைம்மெலிவை மறைக்க ஒரு வழி உண்டு. பெரிய வளையலை அணிந்து கொண்டாற்றானே நெகிழ்ச்சி புலனாகும். நாள் தோறும் மெலியும் கைக்குப் பொருத்தமாக உள்ளூர் வளையற்காரர் வளையல் வைத்துள்ளார், மாற்றிக் கொள்ளலாம் என்று தலைவிக்குக் கூறுவதுபோலத் தலைவனை இடித்துரைக்கின்றாள்.

23. நக்கீரர்

சங்கச் சான்றோர்களுள் நாடறிந்த புலவர் நக்கீரர். அஞ்சாத் தனியுணர்வு உடையவர் என்பதும்,திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் என்பதும் இவர் புகழ்ப்பரவலுக்குக் காணரங்களாம்.கபில பரண் நக்கீரர் என ஒன்றாக எண்ணப்பட்டாலும், அகவிலக்கியப் புலமையில் கபிலருக்கு ஏனை இருவரும் நிகராகார் என்பது வெளிப்படை. ஏன்? பரணரும் நக்கீரரும் வரலாற்று நெஞ்சின்ர். இலக்கியத்தோடு வரலாற்றை மடுப்பவர்.நக்கீரரின் 17 அகநானூற்றுச் செய்யுட்கள் 15 மூவேந்தர்களையும் குறுநில மன்னர்களையும் நுதலுகின்றன.78ஆவது: அகநானூற்றுச் செய்யுட்கண், வேந்தர்கள் பாரியொடு பொருது பொருளாதார முற்றுகையிட்ட ஞான்று, கபிலர் நெற்கதிர் கொண்டுவந்து வெற்றிதந்த அரிய நிகழ்வைக் குறிப்பிடுவர் நக்கீரர். அதன்பின், அத்தகைய வாகைப் பாரியின் பைஞ்சுனையிற் பூத்த புதுமலரைக் காட்டிலும் தலைவியின் துதல் மணமும் ஒளியும் மிக்கது என்று உவமையாக முடிப்பர். 93 ஆவது அகப்பாட்டில், சோழரது நல்லவை திகழும் உறந்தையையும், பாண்டியரது கூடலின் நாளங்காடியையும், சேரரது ஆன்பொருநை யாற்றையும் ஆக மூவேந்தரையும் நினைந்து அகப்பொருட் கருத்துக்களுக்கு உவமைப்படுத்துவர்.

நெடுநல்வாடை அகப்பாட்டே

புலவரின் நெடுநலவாடை அரண்மனைக்கண் அரசியும் பாசறைக்கண் அரசனும் நள்ளிரவில் வாடைக் காற்றினால் உறும் மனநிலைகளை எடுத்துக்காட்டும். நப்பூதனாரின் முல்லைப்பாட்டு, உருத்திரங் கண்ணனாரின் பட்டினப்பாலை போல, நக்கீரரின் நெடுநல்வாடையும் புறத்திணைக் கூறும்மிக்குடையதாக அமைந்துள்ளது. அக்கூறு மிக்கிருந்தாலும், நெடுநல்வாடையாதும் குறைவற்ற அகப்பாட்டேயாம் என்பது என் துணிபு. 'வேம்பு தலையாத்தநோன்காழ் எஃகம்” (வேப்பமாலை நுனியிலே கட்டப்பட்ட வேல்) என்பது இப்பாட்டில் வரும் (176) ஒரடி. அகத்திணையின் தலையாய இலக்கணமாவது பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/336&oldid=1394792" இலிருந்து மீள்விக்கப்பட்டது