பக்கம்:தமிழ்க் காதல்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

327



படைகட்கு இல்லை,இல்லை. சங்கவிலக்கியத்திற் போர்ச் செய்யுட்கள் பலவுள. கருவிகளுக்கு அடையாளம் காட்டியதாக யாண்டும் குறிப்பு அறியேன். தானையர் பூவணிவதாகவே தொல்காப்பியம் கூறும்

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்

மாபெருந் தானையார் மலைந்த பூ (தொல். 1005)

என் காரணங்கள் தகுமெனப்படுமேல், நச்சினார்க்கினியர் தோற்றிய வழிவழிப் பிழையை ஒழித்து, நெடுநல் வாடையை அகப்பாட்டு என்று கற்றும் கற்பித்தும் வருகதில், ஆசிரியர் நக்கீரனாரின் புலமைக்கு உரைவழிவந்த குற்றத்தைக்களைகதில் பெயர் சுட்டுவது போலக் குறிப்பில் தோன்றினும் தலையாய விதியிற் சிறிது பிறழினும் அகப்பாட்டு ஆகாது, அகம் என்று கொள்ளுதல் கூடாது எனவும், அகத்திணை பாடுவது அரியதொரு புலமை எனவும் நச்சினார்க் கினியரின் கூர்த்த மதியால் தெரிந்துகொள்கின்றோம்.

ஒத்த உள்ளங்கள்

நக்கீரர் 33 அகச் செய்யுட்களில் ஆசிரியர் 17 களவின;16 கற்பின. தலைவன் பொருளிட்ட விழைபவன்.தலைவி அவனது முயற்சிக்கு இசைபவள் என்பது புலவரின் படைத்திறன். சுற்றத்தைக் காக்கவும் கேட்டினை விலக்கவும் பகையை நட்பாக்கவும் ஈத்து உவக்கவும் புகழ்தேடவும் பொருளை நாடுகின்றான் தலைவன் (அகம் 99, 389) அவனது பொருட் குறிக்கோள்களைத் தலைவியும் உணர்கின்றாள்.

இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர்
புலம்பில் உள்ளமொடு புதுவதந் துவக்கம்
அரும்பொருள் வேட்டம் எண்ணிக் கறுத்தோர்
சிறுபுன் கிளவிச் செல்லல் பாழ்பட

நல்லிசை தம்வயின் நிறுமார் (அகம். 389)

உணர்ந்து பேசுவது இப்பாட்டு ஆற்றும் மதுகையுடையளாயினும், எத்தலைவியையும் பிரிவுத்தனிமை ஓரளவு கொல்லவே செய்யும். நக்கீரரின் பாட்டுத் தலைவியர்கள் பிரிவு வருத்தம் உற்றாலும், அதனைத் தாங்க வல்லவர்களாகவும், தலைவனையும் அவன் வினையையும் வாழ்த்தும் அறிவுடையவர்களாகவும் இலங்குப. நம்மை அழச்செய்து துறந்தாலும் நல்விருந்து அயரும்பொருட்டு "விழுநிதி எளிதினின் எய்துக” என்பது ஒரு தலைவியின் வாழ்த்து (அகம். 205). "நோயிலராக நங் காதலர்’) என்பது ஒருத்தியின் உள்ளக்கிடக்கை (அகம். 227).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/340&oldid=1394798" இலிருந்து மீள்விக்கப்பட்டது