பக்கம்:தமிழ்க் காதல்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

தமிழ்க் காதல்



இன்னா அரும்படர் தீர விறல்தந்து

இன்னே முடிகதில்

என்பது நெடுநல் வாடையின் வேண்டுகை

புலவர் புனைந்த தலைவனும் தலைவியும் காமநுகர்ச்சியில் ஒத்த வேட்கையினர். காதலியின் முடிக்கூந்தலும் பெருந்தோளும் சிறுமெல் மார்பும் குறுமேனியும் இளையான் உள்ளத்தைக் கவற்றவே, அவளைக் கூடிப்பெறும் ஒரு நாளின்பம் கிடைக்காதா? அவ்வொருநாள் வாழ்க்கை இப்பிறவிக்குப் போதுமே என்று தவிக்கின்றான் தலைவன் (குறுந் 280), இரவு மழை என்று பாராது தலைவியின் வீட்டில் வந்து நிற்கின்றான். (குறுந் 16). -

poem>

குவளை யுண்கண் கலுழ நின்மாட்டு

இவளும் பெரும்பே துற்றனள் (அகம். 310)

</poem>

என்ற தோழி கூற்றால் களவுத் தலைவியும் காமக்காழினள் என்று அறியலாம். இருவர்தம் தொடக்க வேட்கையையும் கண்ட தோழி களவை முடிக்க விரும்பாது, புணர்ச்சிக்கு உதவி செய்வாள். தலைவி நாண்மிக்க மடமகளாதலின், அவளது காமவிழைவைத் தலை வனுக்குப் பதமாகக் கூறுவள். மாலை கழிந்தது, ஒதம் பெருகுகின்றது, சுறாமீன் தாக்கிக் கோவேறுகள் நடைமெலிந்தன, பாம்புகள் ஊர்கின்றன.இவளும் ஏங்குகின்றனள், உடன்வந்த நண்பர்களோடு எம் இல்லில் இரவு தங்கிச் சென்றால் என்னையோ? என்று தலை மகனுக்குத்தோழி உரை செய்கின்றாள்.

திலக நெற்றி

நக்கீரரின் அகப்புனைவில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. பெண்ணின் உடலழகை உறுப்பழகை நிறவழகை ஒவியமாகக் கூறும் ஆர்வம் அவர்க்கு உண்டு. கிளியெனப் பேசும் சிறிய செவ்வாயினள், பெரிய கயல்மீன் என்னப் பிறழும் மைக்கண்ணள், கரும் புயல்போலத் தாழ்ந்து இருண்ட கொத்துக் கூந்தலள், மின் எனத் தோன்றி மறைத்து இலங்கும் நுண் இடையினள் என்று காதல் ஊறுகின்றான் ஒருதலைவன் (அகம் 128). மூங்கில் என்னப் பெருத்த பசுந்தோளும், தென்னங்குரும்பை அனைய மென் முலையும், மார்பிற்படர்ந்த சுணங்குத் தேமலும், நீண்டு தழைத்த கருங் கூந்தலும், திங்கள் அன்ன திருமுகமும்,அம்முகத்தில் காதளவும் ஒடிக் கிடக்கும் கிளர்ச்சிக் கண்களும் பிரிந்துசென்ற தலைவரை மறக்கவிடுமோ? நின்மேனி வனப்பிலும் கண்நோக்கிலும் உயிர் வளர்க்கும் அவர் விரைந்து ஓடி வரமாட்டாரா? என்று தோழி தலைவியை ஆற்றும் புதுமுறையைக் காண்க. சங்கப் புலவருள் நக்கீரர் சிறப்பாக நெற்றியில் திலகம் இடும் வழக்கினைப் பாடியுள்ளார். 'திலகமொடு பதித்த திங்கள் அன்ன நின்திருமுகம்'ஆகம். 253) தேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும்" (அகம் 389) என ள்-த்துத் திலக நெற்றிகள் வருகின்றன. திலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/341&oldid=1394799" இலிருந்து மீள்விக்கப்பட்டது