பக்கம்:தமிழ்க் காதல்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

329


அணிந்த முகத்திற்கு வெறுந்திங்கள் உவமையாகாது என்று திங்களுக்குத் திலகம் இட்டுப் பின் உவமைப்படுத்தும் நக்கீரர் இலக்கியப் புதுமையை அறிக. இவர்தம் திருமுருகாற்றுப் படையிலும் “திலகம் தைஇய தேங்கமழ் திருதுதல்” என்ற கருத்து வரக் காண்கின்றோம்.

புணர்ச்சிப் புனைவுகள்

புணர்ச்சிக் கூட்டுக்கு உரிய பொருள்களையும் ஆயத்தங்களையும் சூழ்நிலைகளையும் காதல் வினைகளையும் முறைகளையும் வெளிப்படையாகப் பாடும் ஒரு புதுப்போக்கு உடையவராக நக்கீரர் முன்னிற்கின்றார். அரசமாதேவியின் பள்ளியறை, நீலமணி போன்ற கருந்துண்கள்,துய வெண்சுவர், பல பூங்கொடி ஒவியங்கள், புகழ்வாய்ந்த பெரிய வட்டக்கட்டில், யானை மருப்பினால் ஆகிய தந்தக் கால்கள், சுற்றிலும் வேட்டைபொறித்த தகடுகள் என்றவாறு, தலைவி உறையும் அக இல்லத்தையும் கட்டிலையும் காட்சிப்படுத்துவர் புலவர்.

முல்லைப் பல்போது உறழப் பூநிரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுணர் அன்னத் துரநிறத் துரவி
இணையனை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்

தோடமை துமடி விரித்த சேக்கை (நெடுநல். 130-5)

பள்ளிப் பாயலின் நறுமணம், மெத்தென்மை, தூய்மைகளை இவ்வடிகள் புலப்படுத்துவன. முதற்கண் முல்லை வெண்பூக்களும் பிறபூக்களும் இடப்பட்டுள்ள, அதன் மேல் ஒரு மெல்லிய விரிப்பு. அவ்விரிப்பின்மேல், புணர்ச்சி வெப்பத்தில் அன்னங்களினின்று உலர்ந்த சூட்டு மயிர்களால் ஆகிய மென்பாயல் தலையணைகள், அதன்மேல் தூய வெள்ளைக் கலிங்க விரிப்பு. இத்தகைய செவ்வியுடையது இன்பப் படுக்கை. "நுரை முகத்தன்ன மென்பூஞ் சேக்கை”, “பல்பூஞ் சேக்கை” (அகம் 93, 381) எனப் பிற பாடல் களிலும் இன்பப் படுக்கையின் அமைப்பைப் புலவர் குறிப்பிடுவர்.

புணர்ச்சிப் பெருக்கத்திற்கு ஊடற் கிளர்ச்சி வேண்டும் தொடுதல், மோத்தல், கேட்டல், பார்த்தல் சுவைத்தல் என்ற ஐம்புலச் செய்கைகள் மென்மெல இன்ப அலைகளை மனக்கடலில் உண்டாக்கும், உயர்ந்தெழச் செய்யும். புணருஞ்செய்கைக்கு முன்னே அதனை உணரும் இன்ப எண்ணங்கள் தழைக்க வேண்டும், காமச் சொற்கள் கனிய வேண்டும் என்ற முன்னிலைக் கூறுகளை அகத்திணை கண்ட தமிழினம் நன்றாக அறிந்திருந்தது. புணர்தல் நிமித்தம் என்பது என்ன? ஊடல் நிமித்தம் என்பது என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/342&oldid=1394800" இலிருந்து மீள்விக்கப்பட்டது