பக்கம்:தமிழ்க் காதல்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

தமிழ்க் காதல்


இவையெல்லாம் புணர்ச்சிக்கு முந்திய கோலங்களும் விளையாட்டுக்களும் அல்லவா? புணர்ச்சிக்குக்கு முன்னே காதலர்கள் செய்து கொள்ள வேண்டிய பாங்குகளைப் புணர்தல் நிமித்தம், ஊடல், ஊடலுக்கோர் நிமித்தம் என்று பலவகைப்படுத்தி யிருப்பதிலிருந்தே இன்பத்தினும் இன்பத்தின் தூண்டுதல்களை இன்பத்தை மடங்காக்கும் எண்ணப் பெருக்கங்களைச் சிந்தித்துக் காட்டினர் தமிழர் என்பது தெளிவாகும். காதலியின் தோளில் துயிலுதல், மார்பில் துயிலுதல், கூந்தலணையில் துயிலுதல், தொய்யில் உழுதல், அல்குலில் பூவணிதல் (அகம். 345), எயிற்றுநீர் அருந்தல் எனவாங்குச் சங்கப் பனுவலில் வந்துகிடக்கும் காமப் பள்ளிக்குறிப்புக்கள் பலப்பல. இந்நுணுக்கங்கள் ஒரு தனி நூலுக்கு உரியவை. நக்கீரர்தம் செய்யுட்களில் ஊடல் நுண் கூறுகள் மிகுந்து காணப்படுகின்றன. இது அவர்க்குரிய தனிப்புலமை.

சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்து
தேங்கமழ் திருதுதல் திலகம் தைஇயும்
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
நல்லிள வனமுலை அல்லியொடு அப்பியும் '
பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு
அஞ்செஞ் சீறடி பஞ்சி யூட்டியும்
எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்
பல்புஞ் சேக்கையிற் பகலும் நீங்கார்

மனைவயின் இருப்பவர் - (ஆகம். 389)

கற்பியல் வாழ்வில் கணவன் மனைவியின் பகற்புணர்ச்சியைக் கூறுவது இச்செய்யுள் என அறிக. கூந்தலை வாரிப் புதுமலர் அணிந்தான். நுதலில் பொட்டு வைத்தான், சாந்தணிந்த வண்ண மார்பில் பல இதழ்களையும் மலர்களையும் அப்பினான், பரந்த தோளில் காதற் காட்சிகளை வரைந்தான்,சிறிய அடிகளைத் தொட்டுத் தூக்கிச் செம்பஞ்சுக் குழம்பு தடவினான், பலவாறு தழுவி அனைத்து மெத்தென்ற பூப்படுக்கையில் பகற் காலத்தும் கூட்டுறவு நீங்காதவனாய்க் கிடந்தான் என்ற முறையில், முடிமுதல் அடிவரை தலைமகன் புணர்ச்சிக்குமுன் இழைத்த ஊடற்பணிகளை இவ்வரும் பாடல் கற்பிக்கின்றது. -

நாளங் காடி நாறு நறுநுதல்
நீளிருங் கூந்தல் மாஅ யோளொடு
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து
நலங்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப

முயங்குகம் சென்மோ நெஞ்சே (அகம். 93)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/343&oldid=1394801" இலிருந்து மீள்விக்கப்பட்டது