பக்கம்:தமிழ்க் காதல்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

333



ஐந்திணை நெய்தல்

புலவரின் ஐந்தினைத் தலைவன் பன்னாள் களவு விருப்பினன். திருமணத்தை விரைந்து முடித்துக் கொள்ளும் நாட்டமிலி, இவன் போக்கு பெற்றோருக்கும் அலருக்கும் அஞ்சும் பெண்ணுள்ளத்துக்கு ஒவ்வாது. அவள் பெரிதும் கவல் வாள். களவுக் குமரிக்கும் பெருந்துயர் தருவது ஒன்று உண்டெனின், அது தலைவனது வரைவு நீட்டிப்பே. ஆதலின் 16 களவுப் பாடல்களையும் வரைவுத் துறையாகவே நெய்தல் அந்துவனார் பாடி முடித்தார். களவில் எத்துணையளவு இரங்கலுணர்வைக் காட்ட இயலுமோ அவ்வளவும் காட்டினர்.

கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார்
தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர் -

நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை - (கவி. 125)

'மறைவை யாரும் அறியார் என்று நாட்கடத்த வேண்டாம். தன் நெஞ்சு தன்செயலை அறியுங்காண்’ என்று தோழி தலைவனை இடித்துரைப்பாளெனின், அவன் எவ்வளவு நாள் களவை நீட்டித் திருக்க வேண்டும்? மலர்ப்புன்னைக்கண் ஒருத்தியின் புதுநலத்தைத் துய்த்த நீ மணவரவை நாடவில்லை; நின் குடிமைக்கும் வாய்மைக்கும் புகழ்மைக்கும் பெரிய பழியில்லையா? என்று தோழி தலைவனை அடுக்கிக் கேட்பாளெனின் அவனது களவியலின் மிகுதிபாட்டை உணர்ந்து கொள்கின்றோம். பெண்ணலத்தை உண்டு அவளை மணவாது கை விடுதல் பாலுண்டு குடித்த குவளையைக் குப்புறக் கவிழ்த்தல் போலாம் எனவும், நோய்க்கு மருந்து அறிந்தும், பனங்கருதி நீட்டிக்கும் மருத்துவன் போலாம் எனவும், தோழி தலைவனது கொடுமையைக் கசந்து கூறுங்கால், அவளது வருத்தவுணர்ச்சி புலனாகின்றது. -

நாணினகொல் தோழி நாணினகொல் தோழி
இரவெலாம் நற்றோழி நாணின என்பவை
வாணிலா ஏய்க்கும் வயங்கொளி எக்கர்மேல்
ஆனாப் பரிய அலவன் அளைபுகூஉம்
கானற் கமழ்ஞாழல் வீயேப்பத் தோழியென்

மேனி சிதைத்தான் துறை (கவி. 131)

நல்ல நெய்தல் இலக்கியத்திற்கு இப்பாட்டு ஒர் எடுத்துக்காட்டு. கள்வை நீடித்தற்கு நாண வேண்டியவன் தலைவன் காதலியின் மேனி மெலிவதைக் கண்டு கவலவேண்டியவன் தலைவன். அவன் அவை செய்திலன். உயர்திணைத் தலைமகன். செய்யாது விட்டவற்றை, அவனது கடற்றுறையில் வாழும் அஃறிணை நண்டுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/346&oldid=1394804" இலிருந்து மீள்விக்கப்பட்டது