பக்கம்:தமிழ்க் காதல்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

தமிழ்க் காதல்



பெருந்திணை நெய்தல்

பெருந்திணைத் தலைவி கழிகாமம் மிக்க கழிபடர் சொல்ல, ஞாயிறு திங்கள் கடல் காற்று எல்லாம் அவளுக்கு முன்னிலைப் பொருள் ஆகின்றன. காமம் தலைக்கொண்டவாளதலின், அவள் பேச்சுக்கள் முன்பின் மலைவாகின்றன. அறிவுக்குப்புறமாய் அவளின் காம வேக்காட்டிற்கு ஒத்தனவாகின்றன. கணவன் உள்ள விடத்தைக் காட்டாவிட்டால் மணல் தெரியும்படி கடல் நீரையெல்லாம் புறங்காலால் இறைத்து விடுவாளாம். காற்று அவனைக் காட்டாவிடின் காமத்தாற் பிறந்த வெப்பக் கண்ணிரால், அதன் மேனியைச் சுடுவாளாம். திங்களுள் இருக்கும் முயல் காட்டா விட்டாலோ அதனைக் கவ்வும்படி வேட்டை நாயை ஏவுவாளாம். வேட்டுவரிடம் போய்ச் சொல்லுவாளாம்.

தலைவியின் பெருங்காமத்தை அதற்கு ஏற்ற சொற்களால் புலப்ப டுத்துவர் அந்துவனார். என்னுடைய தோளைப்புணர்ந்து நெகிழ்த்தவன் நினைவுதவிர நன்று தீது என்ற பாகுபாடு அறியேன் என்று தலைவி தெளிவாகச் சொல்லுகின்றாள். “இரவு கனவில் தோன்றினான். கைப்பிடியாகப் பற்றிக் கொண்டு விழித்தேன். பற்றிய கைக்குள்ளே மறைந்துவிட்டான்”என்று உளறுகின்றாள். மேகத்தைப் பார்த்து, “என் காமம் அணுத்தோறும் கலந்தது. உடல் அணுவெல்லாம் கொதிக்கின்றன.சிறிது பொழுது பெருமழை பெய்தாலும் போதாது. கடல்நீரை முகந்து எப்போதும் கொட்டிக் கொண்டிரு” என வேண்டுகின்றாள். ஐந்தினைத் தலைவிக்குப் போலப் பெருந்தினைத் தலைவிக்கும் பிரிவு மெய்ப்பாடுகள் உள. "நன்னுதல் நீத்த திலகத்தின்” “மேனி மறைத்த பசலையள்”என்ற இருமெய்ப்பாடுகளைப் புலவர் புலனாக்குவர். நெற்றிப் பொட்டினையே அழித்துக் கொள்வாள் என்பது கரைகடந்த காமப் பேதைமையைக் காட்டும். துதல் கண் முதலான சில உறுப்புக்களில் பசலை படரும் என்று கூறாது, மேனி முழுதும் பசலைப் போர்வை கொண்டனள் என்பது அவள்தன் காமப்பித்தையும் காட்டும்

பெருந்திணை ஐந்திணையாதல்

அந்துவனார்தம் பெருந்திணைப் பாக்களின் இறுதியடிகளை நாம் மிகவும் சிந்திக்க வேண்டும். பிரிந்த காதலன் திரும்ப வந்தான்; அவ ன் மார்பை அணைந்து காமம் தணிந்து நலம் பெற்றாள் எனவும், மலைபல கடந்து சென்று காதலன் மீண்டு வந்ததும்,காமமருளி இழந்த நலத்தை எய்தினாள் எனவும், காமப்பிணியும் பசப்பும் நீங்கின எனவும், உறக்கத்தைக் கெடுத்தவன் வரக்கண்டதும் திருமகள்போல அவன் மார்பை ஆரத்தழுவினாள் ஞாயிற்று முன்னர் இருள்போல அவளது காமத்துயர் சுவடற்று ஒடி ஒளிந்தது எனவும், மழைபெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/349&oldid=1394807" இலிருந்து மீள்விக்கப்பட்டது