பக்கம்:தமிழ்க் காதல்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

தமிழ்க் காதல்



ஒத்த காதலர்கள்

புலவர் தம் அகத்துப் பெரிதும் இடம்பெறும் ஆள் தலைமகனே களவிலும் கற்பிலும் அவன் காமக்களியனாக விளங்குகின்றான். நான் தோறும் தலைவியைத் தழுவ வேண்டும் என்பது அவன் ஆர்வம் தன் ஆராவேட்கையை வெளிப்படக் கூறலாமா? ஆகாதா? என்றெல்லாம் உலைந்து, தலைவிக்குமுன் தன் காமப் பெருமையைத் தானே எடுத்துரைக்கின்றான். வெள்ளத்தை உப்புக்கரை தடுக்கவல்லுமா? காமத்தை மெல்லிய நாணம் மறைக்க முடியுமா? (உப்புச் சிறை நில்லா வெள்ளம்போல நானுவரை நில்லாக் காமம்’ அகம். 208) என்பது களவுத் தலைவனது வினா. மெல்லியல் நங்கையின் மார்பணையை விரும்பி, பாம்பு திரியும் நெறி என்று பாராதே. "நெடுந்தொலை இரவில் வந்ததும் அவளை எய்தப் பெறாத நிலையில், மாய்கதில் வாழிய நெஞ்சே' என்று இனி வாழ்வதினும் சாவு நன்று எனத் துணிகின்றான் ஒரு தலைவன். - தலைவன் இரவுப்புணர்ச்சி நாட்டம் உடையவன். பரணரின் களவுப் பாடல்கள் பல இரவுக் காட்சிகளைப் புனைவன. அல்ல.குறித் துறைகளும் இரவுக்காலத்திற்கு உரியனவே.குறித்த இடத்துத் தலைமகளைக் காணப்பெறாமையால் தலைமகன் வருந்தி அல்லல் உறுவதும், காணப்பெற்றபோது பன்மடங்கு இன்பம் உறுவதும் ஆகிய முரண் உணர்ச்சிகளை ஆழமாகப் புலப்படுத்தியுள்ளார் பரணர், அரிய தலைவி தன் சொற்படி தன் காமசுரத்தைக் குளிர்விக்க இரவு வருதல் என்பது தலைவனுக்குப் பேருவகையையும், அவள்பால் பெருமதிப்பையும் உண்டாக்குகின்றது நாண மிக்கவள், குடும்பக் காப்பு உடையவள், சிறு அரவத்திற்கும் பேரச்சம் கொள்பவள், தனித்த செலவு பகலிலும் அறியாதவள், காதலால் புத்துக்கம் பெற்று வருகின்றாள் என்ற நினைவு, தலைவன் நெஞ்சத்தைப் பிணித்துவிட்டது. . . .

"இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து”
நெஞ்சுநடுங் கரும்படர் தீர வந்து’’
“அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து”
“நல்கினள் வாழியர் வந்தே" .
“அந்திங் கிளவி வந்த மாறே”

(அகம். 142, 152, 198, 208, 262)

இரவுக்குறிகளில் புணர்ந்து இன்புற்று ஏகும் தலைமகன் அன்புற்று மொழியும் பகுதிகள் மேற்கண்டவை. தலைவி வந்தாள், வரப் பெற்றேனே என்று அவளது தனிவருகையை விதந்து நெஞ்சிற்கு எடுத்து விளம்புகின்றான். வாரர்க்கால் அவன்படும் துன்பவளவை வந்தக்காற் பெற்ற இன்பவளவும் நோக்கிக் கணித்துக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/357&oldid=1394815" இலிருந்து மீள்விக்கப்பட்டது