பக்கம்:தமிழ்க் காதல்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

தமிழ்க் காதல்


விட்டுகொடுத்து அடிபணிதல் வேண்டும் எனவும், அங்ங்னம் விட்டுக் கொடாமையே, பால் நோயியலின்படி பல பால்வகைத் துன்பங்கட்கு மூலகாரணம் எனவும் ஏவலக் கெல்லீசர் பகருவர்.[1] எனவே ஆண்மை வீழ்ச்சி காதலுலகில் இன்பவுயர்ச்சியாம் இந்நுட்பங்களை அறிந்த தமிழ்ப் பாலறிஞர் இளநாகனார் என்பது அவர் வடித்த அகத்திணைத் தலைவன் பல்லாற்றானும் தலைவி முன் செய்யும் பணிநிலைகளாலும் சொல்லி பணிவுரைகளாலும் அறியலாம்.

ஏதப்பாடு எண்ணிப் புரிசை வியலுங்ளளோர்
கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச்
சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்தின்

ஆண்ை கடக்கிற்பார் யார். (கலி. 81)

30. வெள்ளி வீதியார்

இப்புலமகளார் பாடிய அகங்கள் 13. களவிற்கு உரியன 5; கற்பிற்கு உரியன 8. இவர் புறம் யாதும் பாடவில்லை. களவிற் சில பாடல்களே பாடியுள்ளாரேனும், அவை பல துறைமேல் அமைந்திருக்கின்றன. கழற்றெதிர்மறை, இரவுக் குறி. உடன் போக்கு, இடைச்சுரத்துச் செவிலித்தாய், வரைவுக் கவற்சி என்பன இவர் யாத்த பாடல்களின் களவுத் துறைகளாம்.

வெள்ளி வீதியாரின் அகமாந்தர்கள் களவினராயினும் கற்பினராயினும் காமவுணர்ச்சி மிக்கவர். மழை காலத்தில் பாம்புகளை அடித்துக் கொண்டு வரும் ஆறு என்று பாராது நீந்தி, யானையாற் புண்பட்ட ஆண்புலி ஒதுங்கியிருக்கும் குகை வழியாக நடந்து நள்ளிரவில் வேலேந்தி வருகின்றான் தலைவன். அன்ன ஆர்வத் தலைவன் இன்பப்ப்யன் பெறாது திரும்பலாமா? நல்ல முழுநிலவு இடையூறாக உள்ளதே என்று தோழி சொல்லுகின்றாள் (அகம். 342)

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப் -

பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற் கரிதே (குறுந் 58)

இடித்துரைக்கும் பாங்கனுக்கு எடுத்துரைக்கும் களவுத் தலைவன் செய்யுள் இது. தன் காமப்பரப்புக்கு ஏற்றவாறு வெண்ணெய் உருக்கத்தை உவமிக்கின்றான். யாராலும் தடுத்தற் கரியதுதன் காமம் என்பது அவன் கருத்து. எவ்வளவு தான் காம வெள்ளத்தை என்


  1. The Psychology of sex. p. 128 “Last but not least, we must not forget that a normal sexual union requires the same amount of surrendering and abandonment on the part of the man. And sex pathology shows that the incapacity or rather the unwillingness of men to surrendor or abandon themselves is the root of all sexual trouble.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/377&oldid=1394873" இலிருந்து மீள்விக்கப்பட்டது