பக்கம்:தமிழ்க் காதல்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

தமிழ்க் காதல்


ஆற்றுவிக்கும் தோழிக்கு ஆற்றாது கூறும் மனைவி பாட்டு இது. கணவன் பிரிந்தான் என்றளவிலேயே, முன் பிரிவென்பது அறிiர், தலைவியாதலின், மாநிலம் இழந்து பீர்க்கம் பூப்போலப் பசல்ை நோய் பெற்றாள்காண்; பிரிந்த முதல் நாளிரவே உறக்கம் இழந்தாள் காண்:ஆதிமந்தியின் செயலை உவமை கூறுவது பொருந்துங்கொல்? அவள் கணவன் ஆட்டனத்தி என்பான் காவிரிப் புதுவெள்ளத்தில் நீராடும் போது அடித்துச் செல்லப்பட்டான். படவே, ஆதிமந்தி பேதுற்றுப் புலம்பிக் கரையோரமாக ஓடினாள். கண்டிரோ கணவனை என்று ஒடிக்கொண்டே வினவினாள். இச்செயல் காமத்தால் நிகழ்ந்ததன்று, நாணம் கடந்ததும் அன்று. எப்பெண்ணுக்கும் செய்தற்குரிய இயல்புச்செயல். இச்செயலை உவமைப்படுத்துகின்றாள் ஒரு தலைவி. காட்டின்வழி பொருளிட்டப் பிரிந்து சென்ற தலைவனுக்கு, கணவனின் உயிருக்கு அலறி ஒடும் ஆதிமந்தியின் வாழ்வுணர்ச்சி என்னே, காமம் தாங்கமாட்டாது கணவன் இருக்கும் இடம் ஒடத்துடிக்கும் தலைவியின் மெய்யுணர்ச்சி என்னே, இவ்விரண்டும் ஒரு நிலைகொல்? இருவர்தம் உணர்ச்சிக்கு நிலைக்களம் முற்றும் வேறு. இரண்டனையும் ஒன்றாக இயைத்துப் பரணர் முதலியோர் பாடிவிட்டமையால்,ஆதிமந்தியின் கண்ணகியனைய வாழ்வுத்திறத்தை நாம் மறைக்கப்பட்டோம். "ஆதிமந்தி போலப் பேதுற்று” என்று உவமை கூறுவதால், தலைவி தலைவனது பொருட்பிரிவை உயிர்ப்பிரிவாகக் கருதித் துன்புறுகின்றாள் என்பது பொருள். இதனால் வெள்ளிவீதியின் அகத்தலைவி பெருங்காமத்தள் என்று அறியலாம். * *.

ஒளவையார் ஒர் அகப்பாடலில் வெள்ளிவீதியின் வாழ்க்கையை உவமையாக ஆண்டிருப்பதையும், அது பற்றிய நலந்தீங்கினையும் முன்னரே இந்நூலில் கற்றிருக்கின்றோம். “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவயர்ந்திசினால் யானே’ (அகம் 147) என்பது பிரிந்த தலைமகளின் வேட்கை. ஆதிமந்தி யுவமம் போலல்லாது, வெள்ளிவீதி யுவமம் அகத்திணைக்குப் பொருந்தும், வெள்ளிவீதியும் அகப்பாட்டின் தலைவியும் கடந்த காம நோயினருமாதலின், உவமைப் பொருத்தம் நிற்க, ஒளவையாரின் உவமத்தால், வெள்ளி வீதியார் நிறையற்ற காமத்தர் எனவும், கணவன் இடம் நாடி அலைந்தவர் எனவும் அறிந்து கொள்கின்றோம். இவ்வறிவுக்குப்பின், வீதியாரின் அகப்பாடல் இயல்பைக் கற்கும் போது, அகப்பாடகளின் தலைவியாரும் காமப்பித்தர் எனக் காணும்போது, தம் வாழ்க்கை யைத்தான் பெயர்களைந்து அகமாகப் பாடிவிட்டனர் என்று கருத்துரைக்க முந்துகிறோம்.

இக் கருத்துரை பொருந்துமா? புலவன் வாழ்க்கைக்கும் அகப்படைப்புக்கும் இயைபு உண்டு எனப் பிற சான்றுகளால் அறிந்தாலும், அவ்வறிவோடு அவன் தன் அகமாந்தர்களை ஆராயலாமா?பொருந்தாது, ஆராயலாகாது என்பதுவே அகக்கல்வி நெறி.வாழ்வைப்புறத்திணையாகவும் பாடலாம்.அங்ங்னம் பாடாது அகமாகப் பாடுகின்றான், ஏன்? தன்னை அழித்துதுக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/379&oldid=1394885" இலிருந்து மீள்விக்கப்பட்டது