பக்கம்:தமிழ்க் காதல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை ஆராய்ச்சி

27


வகையாகக் கொண்டு பாலைத்திணையில் புலவர்கள் பாடத் தவறியது ஏனோ? அற்றைத் தமிழினர் அஃறிணை உயிர்களின் இன்பச் செய்கைகளை உயர்திணைக் காதற் கண்ணோடு பார்த்தனர். அன்னோர் காதலெண்ணத்தின் ஒர் இழையாகவே இயற்கை ஒடிக்கிடந்தது. தமிழினத்தின் நெஞ்சியல் அல்லது உள்ளியல் அகத்திணைக்குக் கருவை வழங்கிற்று எனவும், அக்கரு பருத்துப் பெருகிப் பரந்து வளர்வதற்கு வேண்டும் ஊட்டங்களைத் தமிழ்ச் சமுதாயமும் தமிழ்நிலமும் தமிழ்நிலத்துப் பருவ காலமும் உதவின. எனவும் நாம் அறிவோமாக. அகத்திணையை ஈன்று புறந்தந்த தமிழ்த் தன்மையை இம் மூன்றாவது இயல்காட்டும். 4. அகத்திணைக் குறிக்கோள் என்னும் இயலகத்து, கைக்கிளை பெருந்தினை ஐந்தினைப் பகுப்புக்களின் அழகிய நோக்கங்களை உணர்வீர். கைக்கிளையும் பெருந்தினையும் அகத்திணையாக எண்ணப்படுதலின், இவை ஐந்திணையோடு ஒத்த தரத்தனவே. ஏழு பாலொழுக்கங்களையும் அகம் என்ற பொதுப் பெயரால் எண்ணித் தொகுத்ததற்கு ஒரு பொதுத் தன்மை உண்டு. தடுமாறு காட்சியால் ஆணிடை எழுந்த பாலுணர்ச்சியின் நிலையா மனப்பதத்தைப் புலப்படுத்துவது கைக்கிளையின் உட்கிடை. இதனால் கண்டா னுக்கும் காணப்பட்டாளுக்கும் யாதொரு மாசும் பழியும் இல. கைக்கிளையாவது அகத்திணையின் முதிராக் குறுங்கரு என்றும், ஒரேருழவன் போல ஒரே துறைகொண்டு ஒரு தினையாயிற்று என்றும் அறிய வேண்டும். வலிந்து பற்றிய புணர்ச்சியே பெருந்திணை என்று இதுவரை கூறிவரும் கருத்து அடிப்பிழை. த்ாய காதலர்களிடை அளவுகடந்து போய சில பால்வினைகளைப் புலப்படுத்துவதே பெருந்திணையின் உட்கோள். உள்ளம் புணர்ந்த காதலர்களும் உடல்புணரும் காமக்கூட்டங்களை நீட்டியாது மதித்தொழுக வேண்டும். பெருந்தினையாவது அகத்திணையின் முதிர்ந்து வீழ்கரு என்றும், இத்திணைக்கு உரிய துறை நான்கும் தனிநிலை யுடையனவல்ல, சில ஐந்தினைத் துறைகளின் சார்புடையனவே என்றும் நினையல் தகும். ஐந்தினையே அகத்திணையின் இயல்பான வளர்கரு. இத்திணையில் வரும் பலவகைத் துறைகள் எளிய மெல்லிய இனிய சால்பின. மக்களது இயல்பும் திரியுமாகிய பலப்பல பாலோட்டங் களையும் பாலுறவுகளையும் முழுக்கச் சொல்லுவதாக ஐந்தினை தன்மேலிட்டுக் கொள்ளவில்லை; மேலிட்டுக் கொண்ட காதற் செய்திகள் கூட ஒரு நிலையைக் கடந்து செல்லுவதற்கு இடங் கொடுக்கவில்லை. காமக்கிளர்ச்சியை உள்ளத்தோடு உடம்பிடை உணரவல்ல பருவ மக்களின் தூய மனக்கூறு மெய்க்கூறுகளைப் புலனாக்குவதே இத் திணையின் நெறி. ஐந்திணை ஒரு தொடர்கதை அன்று; நெஞ்சம் ஒன்றிய காதலர் பற்பலர் வாழ்க்கைக்கண் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/41&oldid=1237144" இலிருந்து மீள்விக்கப்பட்டது