பக்கம்:தமிழ்க் காதல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

39


அகத்திணை பாகுபாடு 39 நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும் (தொல். 1041) ஒன்றுபட்ட உள்ளக்குறிப்பைத் தலைவன் பார்வை தலைவிக்கும், அவள் பார்வை அவனுக்கும் உரைக்கின்றன. ஒரு கருத்தை வாயாற் சொன்னால் வெளிப்படையாக நன்கு விளங்கும், வாயாற் சொல்லிக் கொள்ளுதல் காதலுலகிற்குப் பொருந்துமா? காதல் நோயை வளர்க்குமா? ஆதலின் காதலர்கள் உள்ளக்கருத்தைக் கண்ணாற் சொல்லிக்கொள்ப. அஃது அவர்கட்கு வாயாற் சொல்லிக் கொள்வதுபோலப் புரியும். வாயின் செயலைக் கண் செய்தலால், “நாட்டம் இரண்டும் உரையாகும்” என்பர் தொல் காப்பியர் காதற் களத்தில் கண்ணுக்குரிய மதிப்பு சிறிதும் வாய்க்கில்லை. “வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" என்பர் திருவள்ளுவர். கண்தந்த ծ,rrւoւb என்பதற்காகக் காமத்துக்குக் கண் காரணமாய் விடுமா? வீரனைப்பெற்ற வயிறு. (“ஈன்ற வயிறோ இதுவே"புறம் 89) என்றால், வீரன் பிறப்புக்கு வயிறு காரணம் என்று சொல்ல மாட்டோம். ஆதலின் உள்ளக் காமம் கண்ணில் வெளிப்பட்டது என்பதல்லது காமத்துக்கும் கண்ணுக்கும் பிறப்புத் தொடர்பின்று. - - - பால் வேறுபட்ட ஆண்மையும் பெண்மையும் பார்த்ததும் உள்ளம் பறிகொடுத்துக் காம்ப்பித்தேறுதற்குக் காரணம் என்கொல்? இவ்வினா இன்னும் திராவினாவே. காதல் காரணம் என்று எளிதாகச் சொல்லி விடுகின்றோம். காதல் என்பதுதான் யாது? இதற்கு அறிவியலும் விடை கூற ஒண்ணாமையைக் கென்னத்து வாக்கர் 'பாலுடலியல் நூலில் ஒப்புகிறார்: “பாலுணர்வுபற்றி ஒரு பொருத்தமான கொள்கையை நாம் கூறுவதற்கியலவில்லை என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். பெண்ணொருத்தியைக் காண்கின்றான்; அவள் மொழியைக் கேட்கின்றான்; அவள் மணத்தை மோக்கின்றான்.அவள் மெய்யைத் தீண்டுகின்றான். க்ண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் போது உள்ளம் காமத்தின் கொள்கலம் ஆகின்றது. உடம்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இவையெல்லாம் புணர்ச்சியிற்போய் முடிவடையும் காதல் புறநிலைகளைக் கண்டு கூறுமளவே அறிவியல் செய்யக்கூடியது. அதன் தோற்றத்தை இது தெளிவாக்குமா? இல்லவே இல்லை.” ஏராளமான இளைய ஆண்களும் பெண்களும் நாள்தோறும் சாலையிலும் சோலையிலும் ஒருவரையொருவர் காண்கின்றனரே, கண்டும், ஒருவன் யாரோ ஒருத்திமேல் காதல் கொள்கின்றான்; ஒருத்தி எவனோ ஒருத்தன்பால் கண்சாய்க்கின்றாள். பலரை விலக்கி ஒருவரைத் தேர்ந்து விரும்பும் இச்சிறப்புப் பார்வைக்குக் காரணம் இதுவென உயிரியல் நூலும் சொல்ல முடிவதில்லை. இஃது 1. Physiology of Sex. p. 43 p. 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/53&oldid=1237162" இலிருந்து மீள்விக்கப்பட்டது