பக்கம்:தமிழ்க் காதல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தமிழ்க் காதல்



உள்ளப்புணர்ச்சியும் மெய்யுறுபுணர்ச்சியும் ஆண்பெண் உறவுக்குக் காதல் காரணம் என்றோம். காதலுக்குப் பால் காரணம் என்றோம். அறிதோறும் அறியாமை கண்டதல்லது என்ன விளக்கம் கண்டோம்? பாலாவது யாது? பாலதானை என்பது என்? பால் கூட்டு வித்தற்குக் காரணம் என்ன? ஒத்த தலைவனும் தலைவியும் பாலதாணையால் காதற் குறிப்பொடு காண்பர் எனின், அவ்விருவரும் ஒத்தவர்களாக இருப்பதற்குக் காரணம் பிறிதுண் டோ? ஒப்பு என்பது எது? அஃது ஒருபிறவியொப்பா? பல்பிறவி யொப்பா? - இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கிரென் கணவனை யானா கியர்நின் னெஞ்நேர் பவளே. (குறுந் 49) நினக்கிவன் மகனாத் தோன்றி யது உம் மனக்கினி யாற்குநீ மகளா யது உம் பண்டும் பண்டும் பல்பிறப் புளவால் கண்ட பிறவியே யல்ல் காரிகை (மணிமே. 24, 56-9) என்று இலக்கியம் கூறுமாங்கு, தலைவன் தலைவியர் வழிவழிக் கணவன் மனைவியரா? இன்ன ஐயங்கள் நம் அறிவில் கிளைக்கின்றன. திருக்கோவை உரைப் பேராசிரியர் காதல் வாழ்க்கையில் விதிக்கு உயரிய மதிப்பு நல்கவில்லை.பாங்கற் கூட்டம் தோழியற் கூட்டங்களுக்குப் பாங்கனும் தோழியும் துணையாவார் அத்துணை யல்லது தலைவன் தலைவி காதலுக்குக் காரணமாகார் அன்றே; அதுபோல இயற்கைப்புணர்ச்சியில் விதி கூட்டுவித்த துணையல்லது அவர்தம் அன்புக்கு காரணமாகாது என்பது அவ்வுரையாசிரியர்.துணிபு: நிற்க, காதலர்தம் மனவொற்றுமையே அகத்திணையின் உயிர்ப் பண்பு. இவ் வொற்றுமையை உள்ளப் புணர்ச்சி’ என்று அகவிலக்கணம் கூறும். எவ்வகை அகத்தினைப் பாடலுக்கும் அகத்துறைப் பாடலுக்கும் உள்ளப்புணர்ச்சி இன்றியமையாதது: புற நடையில்லாதது; இறைமை சான்றது. அகப்புலவர் இவ் வடிப்படைக்கு ஊறுபடயாதும் கூறார். ஊறுபடா நிலையில் யாதும் கூறுவர். இப் பேருண்மை இவ்வாராய்ச்சி முழுவதும் நீள நினைய வேண்டுவது என்று குறிக்கொண்மின், - ஆளான தலைவன் தலைவி உள்ளம் புணர்ந்தபின் உடற்புணர்ச்சிக்கு அவாவுதல் முறையே. மனம் ஒன்றிய காதலோர் உடல் ஒன்றுதற்குத் தக்க தனியிடம் தேர்வர். இடம் வாய்ப்பின் இன்பப்பாயல் கொள்ளப் பின் வாங்கார். பெற்றோரைக் கலந்து மேல்செய்வன செய்வோம் என்னும் அறிவு ஒடார். மண் சுழலினும் அ.இறையனார்.ப.33-35. திருக்கோவையார் பா. எ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/56&oldid=1237171" இலிருந்து மீள்விக்கப்பட்டது