பக்கம்:தமிழ்க் காதல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

45


(கீழான பருவ எழுச்சிக்கு இடங்கொடா) உயர்ந்த காதலாகும். இயற்கைப் புணர்ச்சியில் கண்டு கலந்த தலைவனுக்கும் தலைவிக்கும் அவ்வளவில் மனநிறைவு ஏற்படுமா? பிரிந்த பின் புணர்ந்த நினைவும் புணர்ந்தார் உருவமும் நெஞ்சை அரித்தன. புதிய பெரிய உறவை மீண்டும் ஒருமுறை களித்துக் காண்பதே இடந் தலைப்பாடு. இத் தலைப்பாட்டால் ஆரா இளைய நெஞ்சங்கள் வேகந்தணிகின்றன; அமைதிக்கு வருகின்றன; நம்பிக்கை கொள்கின்றன. 3. பாங்கற் கூட்டம் இடந்தலைப் பாட்டின் பின்னர், நண்பன் தலைவனைக் கான்கின்றான்; முகச்சோர்வைக் கண்டு இரவெல்லாம் உறக்க மில்லையோ என்று பொதுப்படக் கேட்கின்றான். காமத்தைப்பற்றி வெளிப்படையாக உரையாடல் ஆண் நண்பர்களின் மனக்கூறு. உறங்கவில்லையோ என்ற வினாவுக்கு ஒரு குறச்சிறுமியின் தண்ணிர்போலும் மென்சாயல் தீப் போலும் என் நெஞ்சுரத்தை அவித்துவிட்டது; - - சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் உரனவித் தன்றே. (குறுந். 95) என்று தலைவன் ஒளிவு மறைவின்றிப் பெருமிதம் தோன்ற மறுமொழி கின்றான். இவ்வொழுக்கம் நின் அறிவுக்கும் பெருமைக்கும் குடிமைக்கும் தகுமோ என்று இடிக்கும் நண்பனுக்கு, 'இவை யெல்லாம் உன்னைவிடஎனக்குத்தெரியும் அவள் குவளைக் கண்ணைப் பார்ப்பதற்குமுன் பேச வேண்டிய பேச்சுக்கள்’ எனத் தலைவன் எதிருரைக்கின்றான் (நற். 190) அறிவுநிலையில் நிற்கும் இளம்பாங்கன், “தலைவி அரியவள் அவள் நினைப்பை விட்டொழி (நற். 201) என்று மேலும் தடுத்துரைப்பவே தலைவன் ஆற்றலன் ஆயினான். காமக்கிறுக்கனாய்க் காதற்பித்தனாய் கைகடந்து பேசல் ஆனான். - கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சில் ஒதிப் பெருந்தோட் குறுமகள் சிறும்ெல் லாகம் ஒருநாட் புணரப் புனரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே (குறுந் 280) இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளாக் அன்பன் கருதுவான். போர்க்களம் புக்குப் புண்படாத நாளெல்லாம் புறங்கொடுத்த நாளாக மறவன் கருதுவான். அகம் புகுந்தவளின் மெல்லிய ஆகத்தை மேவாத நாளெல்லாம் வாழ நாளாகக் காதலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/59&oldid=1237182" இலிருந்து மீள்விக்கப்பட்டது