பக்கம்:தமிழ்க் காதல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

47



மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே. (குறுந். 204) இது தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. இருபாட்டிலும் முதலடிகள் இரண்டும் ஒத்தன. காமம் என்னும் சொல் பண்டு இடத்திற்கேற்ப உயர்காமத்தையும் இழிகாமத்தையும் குறித்தது போலும், உயர்ந்த காமத்தை இழிவான காமமாக உலகோர் கருதுவர்; அவ் வுயர்காமம் இழிகாமம் போல வருத்தமும் நோயும் தருவதில்லை, என்று மிளைப்பெருங் கந்தனார், காதலை நுகர்ந்த தலைவன் வாயிலாகவும், அவனை இடித்துரைக்கும் அறிஞன் வாயிலாகவும் உலகோர்க்கு மறுப்பு உரைப்பர்; காமத்தின் சிறப்பைப் புலப்படுத்துவர். இவ்வுயர் காமமாவது யாது? அன்புடைய எதிர்பாலாரைக் காணும்போது வெளிப்படுவது என்கின்றான் தலைவன். இஃது இவன் துய்த்துக் கண்டது. காமமாவது ஒரு மனநிலை; விரும்பினோரை அது விடாது; வெறுத்தோரை அது தொடாது என்று இடித்துரைக்கின்றான் பாங்கன். இஃது இவன் துய்ப்பின்மையால் வந்த அறிவுரை, அல்லது, கடமையுணர்ச்சியால் எழுந்த உரை என்றும் கொள்ளலாம். பாங்கற் கூட்டச் செய்யுட்கள் எல்லாமே அறிவுச்செறிவும் இலக்கியப் பொலிவும் உடையன. காதலியர் தம் கண் என்னும் பின்னா வலையுள்ளும், கூந்தல் என்னும் பின்னிய வலையுள்ளும் பட்ட ஆடவர் தம் நெஞ்சத் துடிப்பைக் காட்டுவன. இப் பாடல்களால், காதலாவது ஒற்றுமை வேற்றுமைத்தரம் பார்த்து ஆராய்ச்சிசெய்து அறிவுநிலையில் நிகழ்வதன்று இதற்கிது மாண்டது என்னாது அதற்பட்டு ஆண்டொழிந்தன்றே மாண்தகை நெஞ்சம் (குறுந் 184) என்று ஒரு தலைவன் கூறியபடி, காரணம் கடந்த தூய மனநிலையில் அமைவது என்ற உண்மையைக் கற்கின்றோம். ஐந்தினை இலக்கிய மாந்தர்களில் பாங்கன் படைப்பு இருவகைப் பயனுடையது. செகப்பிரியர் எழுதிய பன்னிரண்டாம் இரவு நாடகத்தில், இலிரியாக் கோமகன் ஆர்சினோ செல்வப் பெருமாட்டி ஒலீவியர்வைக் காதலிக்கின்றான். இவன் காதலுக்கு அவள் இணக்கக்குறிப்பு நல்கவில்லை. ஆதலின் தன் பாங்கன் செசாரியோவைத் தூது விடுக்கவே அவன் ஒலீவியாவை நேரிற் கண்டு அவள் தனியழகையும். ஆர்சினோவின் பெருங்காதலையும் கவிஞன் போல எடுத்தியம்புகின்றான். மிக நலம் பெற்ற நீ ஒரு தமியளாய் மூப்படையலாம்ா? உன் எல்லையற்ற அழகுக்கு உலகில் ஒருபடி வேண்டாமா?’ என்று இனிக்கப் பேசுகின்றான். இங்ங்ன் 1. “Lady, you are the cruell'st she alive If you will lead these graces to the grave And leave the world no copy.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/61&oldid=1237191" இலிருந்து மீள்விக்கப்பட்டது