பக்கம்:தமிழ்க் காதல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தமிழ்க் காதல்


சொன்ன குறியிடம் சென்று, அத்தகையாளைக் காண்கின்றான். 'நெய்தற்பூ மணக்கும் கூந்தலழகியின் பிடிப்பட்டோர் இரவும் உறங்குவாரோ? பாம்பு கடித்தன்ன பாடுபடாரோ?' என்று பாங்கனே உணரக் காண்கின்றோம். இரவி னானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்து தொண்டித் தண்ணறு நெய்தலின் நாறும் பின்னிரும் கூந்தல் அணங்குற் றோரே. (ஐங். 173) 4. தோழியிற் புணர்ச்சி சங்க இலக்கியத்து 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 40 பாடல்களே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம் என்ற மூன்று வகைக்கும் உரியன. எஞ்சிய 842 பாடல் - 9.5 விழுக்காடு - தோழியிற் புணர்ச்சி என்னும் ஒரு வகைக்கே வருவன. இதனால் தோழியின்றிக் காதலர்களின் களவொழுக்கம் நீளாது என்பதும், ஐந்திணை இலக்கியப் படைப்புக்குத் தோழி என்னும் ஆள் (பாத்திரம்) இன்றியமையாதவள் என்பதும், தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம். தோழியின் தொடர்புக்குப் பின்நிகழும் காதற் செய்திகள் அளவில. அவற்றையெல்லாம் இங்குக் கூறப் புகுதல் மிகையும் குறையுமாம், வேண்டுமளவே விளம்புவல். காதலியைத் தற்செயலாக எவ்வளவு நாள் காண முடியும். பாங்கன் எவ்வளவு உதவி செய்வான்? நினைத்த விடமெல்லாம் சுற்றித்திரியும் போக்குரிமை ஆடவர்க்குத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உண்டு. அன்ன உரிமை குலமகளிர்க்கும் கும்ரியர்க்கும் இல்லை. யாயே கண்ணினும் கடுங்காதலளே - " . எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவனில குறுமகள் இயங்குதி என்னும் (அகம். 12) காப்பும் பூட்டிசின் கடையும் போகலை பேதை யல்லை மேதையங் குறுமகள் (அகம், 7) இரவும் பகலும் தாய் தந்தையின் கடுங்காப்புக்கு இல்லக் குமரியரை உள்ளிாக்குவது தமிழ் நாகரிகம். “வண்ணச் சீறடி மண்மகள் அறிந்தில்ன்' எனச் சிலப்பதிகாரமும், “கன்னிக்காவலும் கடியிற் காவலும் விலைமகளிர்க்கு இல்லை” என மணிமேகலைக் காப்பியமும்மொழிதல் காண்க, ஒருகால்பெற்றோர் இசைவுபெற்று வெளிச் ச்ெல்லினும் விடாது தோழியும் உடன் செல்வாள். யாமே பிரிவின் றியைந்து துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஒருயிரம்மே (அகம். 12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/64&oldid=1237189" இலிருந்து மீள்விக்கப்பட்டது