பக்கம்:தமிழ்க் காதல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

51


எனத் தலைவி தோழியின் இணைபிரியாக் கேண்மையைக் கபிலர் இல்பொருளுவமை என்னும் கற்பனையால் வெளிப்படுத்துவர். இவ்விருவரும் ஒருநாள் நீர்விளையாடப் பார்த்த தலைமகன் அவர்தம் கடுநட்பைத் தெளிந்தான். தெப்பத்தின் தலைப் பாகத்தைத் தோழி பிடித்தால், இவளும் அப் பாகத்தையே பிடிக்கின்றாள். அவள் அதன் கடைப்பகுதியைத் தழுவினால் இவளும் அதனையே தழுவ முந்துகின்றாள். தோழி தெப்பப்பிடி வழுவி நீருள் மூழ்கினால், இவளும் உடன் மூழ்குவாள் போலும் (குறுந் 222)" எனக் கண் சான்றாகத் தலைவன் கண்டு கொண்டனன். தோழி நீங்கா ஒர் இடையூறு என்றும், தோழியின் தோழமையைப் பெற்றாலன்றித் தலைவியின் தோளைப் பெறுதல் அரிது என்றும் அவனுக்குப் புலனாயிற்று. . களவுத் தொடர்பைத் தோழிக்கு உணர்த்துவது எங்ங்ண்? தலைவி நானொடு பிறந்து நாணிலே வளர்ந்தவள். ஆதலின் தோழியிடத்துத் தன் புதிய உறவைக் கூறவே கூறாள். கூறும் பொறுப்போ கூசாப் பிறப்பினானாகிய ஆடவனைச் சார்ந்தது. தோழியும் தலைவியும் ஒருங்கு இருக்கும்போது சென்று வெளிப் படையாகவோ குறிப்பாகவோ களவை நயமாகப் புலப்படுத்தல் தலைவன் முறையாகும். ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல் நல்லார்கட் டோன்றும் அடக்கமும் உடையன் இல்லோன் புன்கண் ஈகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன் அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டி சுடரிழாய் (கலி. 47) எளிமை, பெருமிதம், அறிவு அடக்கம், அருள் ஆற்றல் உடைய ஒரு நம்பி எவ்வன்மையும் இல்லாத என்பால் வந்தான்; நின்னை இன்றி எனக்கு வாழ்க்கை இல்லை என்றான். ஒரு பெண்பொருட்டுத் தன் ஆண் தகுதிக்ளை யெல்லாம் கை விட்ட்ான். இவன் சொல் நம்பத்தக்கதோ? தனி ஒரு பெண்ணால் ஆராய்ந்து உண்மை காணும் தகுதியுடையதோ என இவ்வாறு தலைவனின் தோற்றத்திலும் பண்பிலும் தோழி ஈடுபட்டாள். அவன் குறையை முடித்து வைக்கவும் எண்ணினாள். எனினும் தலைவியை அணுகுவது எப்படி? களவுச் செய்தி தோழிக்குத் தெரியும் என்று அறிந்தாற்கூட அவள் நாணம் பொறுக்காதே மெய்யானநிகழ்ச்சியைச்சொல்லியோ (கலி, 60), பொய்யாக நிகழ்ச்சியைக் கற்பித்தோ (கலி 37 அகம், 32) இரு பொருள்படும்படி தொடரமைத்து, எவ்வகையானும் தலைவியின் மெல்லிய நாணம் ஊறுபடாதவாறு, அவள் நெஞ்சத்தை அறிய முயல்க என்று தொல்காப்பியர் வழி கூறுவர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/65&oldid=1237188" இலிருந்து மீள்விக்கப்பட்டது