பக்கம்:தமிழ்க் காதல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தமிழ்க் காதல்


மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் (தொல். 1059) மகளிற்கு நானுணர்ச்சி மிகக் கூரியது. ஒரு பெண்ணின் காதலுள்ளத்தை நெருங்கிப் பழகும் மற்றொரு தோழிப் பெண் வினவத்துணியாள்."என் தோழி நன நாணுடையள் (ஐங்.205) என்று தன் தலைவியின் இயல்பை ஒரு தோழியே கூறுதல் காண்க, தோழி என்ன, ஈன்று வளர்த்த தாய்கூடத் தன் ஒரு மகளின் காதற்கரவைக் கேட்க அஞ்சுவாளென்றால் திருதுதல் நல்லவர் நாணின் நுண்மை அறியத்தக்கதோ? 'தன்மகள் போக்கைத் தாயே அறிந்துகொள் ளட்டும்; இது பற்றி நமக்கென்ன கவலை என்று வாளா இராது, வாய்' கொழுத்த ஊர்ப் பெண்டுகள் ஒருநாள் இருநாள் அல்ல, பலநாள் வந்து வந்து என்னிடம் என்மகள் பற்றிச் சொல்லுகிறார்கள். யானோ அவளிடம் அதுபற்றி ஒன்றும் வாய்திறப்பதில்லை. ஏதும் கேட்கப் புகின், நாணம் அவளைக் கொல்லும். ஆதலின் உரார் சொல்லும் செய்தியை மிகவும் மறைத்து வைத்துக் கொள்கிறேன்.” உவக்குந ளாயினும் உடலுந ளாயினும் யாயறிந் துணர என்னார் தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் இன்னள் இனையள்நின் மகளெனப் பன்னாள் எனக்குவந் துரைப்பவும் தனக்குரைப் பறியேன் நானுவள் இவளென நனிகரந்துரையும் யான் (அகம். 203) என ஒரு தாய் கூற்றில் வைத்துக் கபிலர் பெண்பாலின் நானச் செவ்வியைப் புலனாக்குவர், குமரியர் தம் காமக்குறிப்பைச் சொல்லாலும் வெளிப்படுத்துவதில்லை. எண்ணத்தாலும் அறிய இடங்கொடுப்பதில்லை. ஆகலின், அன்னவர் அகமனத்தைக் காண்பதற்கு ஒருவழி போதாதென்று தோழிக்கு எழுவழி கூறுவர் தொல்காப்பிய்ர் அவையாவன். புதியமணம் 2.புதிய்கன்ள3.புதிய ஒழுக்கம் 4. உணவில் மனம் செல்லாமை 5. செயலை மறைத்தல் 6, தனியே செல்லல் 7 தனியே இருத்தல், மடலேறு தல் 3. * - தலைவியின் நற்குறிப்பு அறிந்தபின், காதலர்கள் பகலும் இரவும் காணவும் கூட்வும் தோழி வழிசெய்வாள். இயற்கைப் புணர்ச்சி முதலான முன்னைக் கூட்டங்கள் நிகழ்ந்த இடத்தே நிகழும். தோழி சூட்டுவிக்கும் கூட்டங்களோ வேறுவேறிடத்து நடக்கும். இன்ன இடம் என்று தளம் சுட்டுவது தோழியின் பொறுப்பாகும். க்காட்சிக் களங்கள் பகற்குறி, இரவுக்குறி எனப்படும். னோடு தலைவியின்.உறவை அறிந்துகொண்ட பின்னும், க்கு இடையூறு போலக் காட்டிக் கொள்வாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/66&oldid=1237187" இலிருந்து மீள்விக்கப்பட்டது