பக்கம்:தமிழ்க் காதல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தமிழ்க் காதல்


எனவும், வேண்டிய வடிவம் எடுத்து மலர்சூடி நம் தோட்டத்து ஒரு பேய் வந்து போவதை அறியாயோ எனவும் தோழி நகையாகவும் நயமாகவும் வேறொன்று சொல்லி மழுப்பக் காணலாம். முன்பில்லாத ஆற்றலும் துணிவும் ஒட்பமும் காமத்தால் உண்டாகும் என்ற அடிப்படையில் இரவுக் குறிப்பாடல்கள் அமைந்துள்ளன. தோழியின் நோக்கம் 竣 ஐந்திணை இலக்கியத்துத் தோழி என்னும் ஆளைப் படைத்த பயன் என்ன? அவள் துணையின்றிப் பகற்குறி, இரவுக்குறிகள் நிகழா: களவொழுக்கம் நீடிக்காது; ஆதலின் தோழி வேண்டும் எனப் பலர் கருதுவர். இக்கருத்துப் பிழைபட்டது. களவு நீளவேண்டும் என்பதும், காதலாயினார் இருவகைக் குறிகள் நிகழ்த்த வேண்டும் என்பதும் அகத்திணையின் நோக்கம் இல்லை. பால் வயத்தால் தாமே கண்டு தம்முட்புணர்ந்த களவுக் காதலர்கள் கற்பாக வேண்டும் வெளிப்படையாக மணந்து இல்லறம் நடத்த வேண்டும் என்ப.ே அதன் நோக்கம். இந்நோக்கத்தை நிறைவேற்ற வருபவளே தோழி என அறிக. இதனால் தோழி கற்பொழுக்கத்திற் காட்டிலும் களவொழுக்கத்தில் இன்றியமையாதவள் என்பதும் விளங்கும் நோக்கம் நிறைவேறத்தக்க காலம் வாயாவிட்டால், களவு நீடிக்கு என்றும், களவு நீளும்போது பகற்புணர்ச்சி, இரவுப் புணர்ச்சிகள். நடைபெறும் என்றும் கொள்ளவேண்டும். காமம் காழ்க்கொண்ட இளைய நெஞ்சங்களுக்கு மேல் செய்ய வேண்டுவன புலப்படா. எண்ணிப்பார்க்கும் அறிவு சில நாளைக்குத் தோன்றாது. இவ்விருவர் செய்கையைத் தோழி அறிவுநிலையில் நின்று நாடுகிறாள். களவு நீடிப்பின், வரத்தகும் கேடுகளைக் காண்கின்றாள். இளையளாயினும் பொறுப்பு உணர்ந்தவளாதலின், திருமணம் செய்து கொள்க என்று தலைவனை இடித்துரைக் கின்றாள். 'இவள்மீது வைத்த அன்பால் முதலைகள் வழி மறைத்துக் கிடக்கும் கடற்கரையில் மீன் கூட்டம் துள்ளும் உப்பங்கழிகளை நீந்தி இரவென்று பாராது நீயோ வருகின்றாய். இவளோ நீ வரும் வழியின் கொடுமையை எண்ணிப்பார்த்துத் தன் பேதைமையால் கலங்குகின்றாள். நஞ்சுண்ட இரட்டைக் குழந்தைகளுக்கு வருந்துவதுபோலக் காமங்கொண்ட உங்கள் இருவர் பொருட்டு நான் அஞ்சுகிறேன்.” கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றை வழிவழக் கறுக்கும் கானலம் பெருந்துறை இனமீன் இருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி இவள்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/70&oldid=1237196" இலிருந்து மீள்விக்கப்பட்டது