பக்கம்:தமிழ்க் காதல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

57



மடனுடை மையில் உயங்கும் யானது கவைமக நஞ்சுண் டாஅங்கு - அஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே (குறுந் 234) என்று தலைவனது அன்பையும் தலைவியின் அறியாமையையும் தன் அச்சத்தையும் சுட்டிக்காட்டித் தலைவனுக்கு வரைவுணர்ச்சி ஊட்டக் காண்கின்றோம். “திருமணம் தவிர்க்க முடியாதது; இன்றியமையாதது. இதனைப் புரிந்து கொள்ளுவோமேல், நயமும் பொருத்தமும் உடையதாகத் திருமணத்தைச் செய்ய முயல்வோம்” என்று அறிஞர் பென்னாட்சா மனங்கோடல்’ என்னும் நூலின் முன்னுரையில் குறிப்பிடுவர். களவொழுக்கம் தூயது, கள்ளவொழுக்கம் தீயது. களவுக் காதலர் மனமாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தினர், வெளிப்பட்ட பின்னும் வாழ்பவர். கள்ளக் காதலர் தம்முள் அன்பற்றவர், மணம் என நினையா வஞ்சகர், வெளிப்படின் மாய்பவர் அல்லது மாய்க்கப்படுபவர். காதலுக்குத் திருமணமின்றேல் சமுதாயத்துக்கு வாழ்வில்லை. ஆதலின், அகத்தினை கண்ட தமிழ்ச் சான்றோர் வரைவை - மன்றலை வலியுறுத்தினர் எனத்தெளிக, தோழி களவொழுக்கத்தில் பேரிடம் பெற்றிருப்பதற்கும் 882 களவுப் பாடல்களில் பாதிக்குமேல் வரைவுத் துறைகளாய் இருப்பதற்கும் திருமணக் கொள்கையே ஏதுவாகும். நள்ளிரவில் தலைவன் வரும்வழி யானையும் புலியும் பாம்பும் நடமாடுவது. தடம் குறுகலும் வழுக்கலும் அமைந்தது. மழை இடி மின்னலோடு கொட்டுவது. மரப்பொந்தும் செடித்துறும் கொடிப் பிணக்கமும் உடையது. நடுயாமம் எனக் காலம் பாராதும், உயர்ந்து சரிந்த சிறிய இட்டிடை என இடம் பாராதும், காதல் வலியே வலியாகத் தலைவன் வருவது தோழிக்கு நல்ல வரவாகப் படவில்லை. மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ - இன்றுதலை யாக வாரல் (அகம். 318) 'திருமணம் உடனே செய்துகொள்ள விரும்பினாலும் செய்து கொள்க; இனிமேல் இரவுக்குறி வராதே’ என்று தோழி கடுமையாக முன்னுறுத்தக் காண்கின்றோம். வழியச்சம் தோழிக்கே இருக்கும்போது, தலைவிக்கு எவ்வளவு இருக்கும்? செங்குத்தான யானைபோலும் ஓங்கலின்மேல் கயிறுபோலும் ஒற்றைச் சிறுதடத்து இருளில் தலைவன் வருகின்றானே, ஈரம் வழுக்கிப் படுகுழியில் விழுதலும் கூடுமே; அங்கிருந்து அடிதாங்கி அணைத்தற்கு ஆள் வேண்டுமே என்று என் நெஞ்சு என்னைக் கேளாது உன்னிடமும் சொல்லாது புறப்பட்டுப் போய்விட்டது'; 1. Preface of “Getting Married’ p. 182.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/71&oldid=1237197" இலிருந்து மீள்விக்கப்பட்டது