பக்கம்:தமிழ்க் காதல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

59


என்றும், இங்ங்னம் ஏழுநாள் ஏழு இடையூறுகள் ஏற்பட்டன என்றும், இது எங்கள் குறையுமன்று, யார் குறையுமன்று, களவின் குறை என்றும் ஒரு தலைவி ஏங்கி இரங்கி மொழிகின்றாள். “விழாக் காலத்துத்தான் ஊர்மக்கள் துரங்க மாட்டார்கள். இவ்வூராரோ விழா இல்லாக் காலத்தும் உறங்குகின்றிலர். ஒருகால் இவ்வூரினரும் வாணிகம் பெருத்த கடைத்தெருவினரும் தூங்கிப்போ னாலும், என் தாயென ஒருத்தி இருக்கின்றாளே, எப்போதும் வெடுக்கென்று கொத்துகின்ற அவளுக்கு உறக்கம் என்பது ஒன்று வருவதேயில்லை. என்னை வீட்டகத்துப் பூட்டி வைக்கும் அன்னை மறந்து ஒரு வேளை துங்கிவிடினும், ஊர் காவலர்கள் விழித்த கண்ணாய் வேலேத்தி மூலை முடுக்கெல்லாம் கிடுகிடெனச் சுற்றித் திரிவர். ஒரு சமயம் அவர்கள் தூங்கினும், வால் மடங்காக் காவல் நாய் விடாது குாைக்கும். ஒயாது குரைத்து அயர்ந்து அக் கூரிய பல் நாய் ஒரு கணம் கண் சாயினும், வெண்ணிலா வானத்து தின்று பகல்டோலப் பேரொளி விசும். மதியும் தண்கதிர் சுருக்கி மலைக்குள் மறையும்போது, இன்னாக் குரல் கொண்ட கோட்டான்கள் வீட்டெலிகளை இரைகொள்ள வேண்டி, பேய் திரியும் நடுச்சாமத்து விடாது குழறும். கோட்டானும் கத்துதல் நின்றபோது, விடிவை அறிவிக்கும் கோழி கூவும். இவ்விடையூறெல்லாம் இல்லாத நாளொன்றில்லை. ஊராரும் தாயாரும் காவலோரும் நாயாரும் தூங்கித் திங்களும் தோன்றாது கோட்டான் குழறாது கோழி கூவாது ஒரு நல்லிரவு வரப் பெற்றேனாயின், ஐயகோ, நாள்தொறும் பயனின்றி வந்த அவர் அன்று வராதிருந்து விடுவார். தித்தன் உறந்தைக் காட்டுப்பாதை எவ்வளவு முட்டுப்பாடு உடையது. அவ்வளவு இடர்ப்பாடு நிரம்பியது நம் களவு நெறி," எல்லாம் மடிந்த காலை ஒருநாள் நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே அதனால் . . . . . . . . . . . . . . . . நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல்முதிர் புறங்காட் டன்ன பல்முட் டின்றால் தோழிநங் களவே. (அகம், 122) வெறியாட்டு தன்மகள் மேனி நாள்தோறும் மெலிவதைப் பார்த்து நற்றாய் (செவிலித்தாய்) கவல்கிறாள். உண்மையான காரணம் அவளுக்குப் புலனாகவில்லை. மரபுவழிப்பட்ட தாயாதலின், இம்மெலிவு முருகனால் வந்தது என்று நம்பி, முருக பூசை செய்யத் துணிந்தாள். இதுவே வழியெனக் கிழவிகளும் கூறினர். வீட்டில் நல்லதோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/73&oldid=1237203" இலிருந்து மீள்விக்கப்பட்டது