பக்கம்:தமிழ்க் காதல்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

67


மாறுகின்றது. காதலனால் மாறிற்று என்பதை அறியாது, வேலனின் வெறியால் மாறிற்று என்று அன்னையும் பிறரும் மகிழ்கின்றனர். இவர் அறியாமையைக் கண்டு தலைவி சிரிக்கின்றாள். உருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள். நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத் தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து நக்கனென் அல்லனோ யானே எய்த்த நோய்தணி காதலர் வரவீண்டு ஏதில் வேலற் குலந்தமை கண்டே (அகம். 22) வெறியாட்டு நடந்த பின்னும் களவொழுக்கம் நீடித்தல் உண்டு. வெறிக்குத் தலைவி அஞ்சுவதில்லை என்று இதனாற் பெறப்படும். வேலன் வெறிக்கு அஞ்சாக் கள்ளி (கள்வி என்பதன் பொருள் வேறு) நொதுமலர் வரவுக்கு அஞ்சுவாள். அயல்மணம் கற்புடைக் குமரியின் உயிரை அறுப்பதோடு, சமுதாயத்தின் ஒழுக்க வேலியைப் பிரித்துவிடும். ஒருத்தி உறவுமாறி மணப்பதை உண்மை யறிந்தக்கால், பெற்றோரும் ஒவ்வவே ஒவ்வார். ஆதலின் தலைவியும் தோழியும் வேற்று மணம் பேசுதலைப் பார்த்துக் கொண்டிரார். முடிவுவரை காத்திருப்போம் என்று அமைதி கொள்ளார். பேச்சை இடை முடிப்பதற்குக் கூடிய வழிகளையும் கையாள்வர். வேற்றவனது தமர் பெண்கேட்க வந்த ஒரு சமயம் தலை மகள் பட்டினி கிடந்தாள் என்றும், இன்ன தலைவன் உணவு கொடுத்தாலல்லது இவள்.இப் பட்டினி நோன்பை விடாள் எனத் தோழி செவிலிக்கு அறிவித்தாள் என்றும் அம்மூவனார் பாடுகின்றார்:- தண்ணந் துறைவன் நல்கின் ஒண்ணுதல் அரிவை பாலா கும்மே. (ஐங். 168) நாணத்தை விட்டேனும் காக்கவேண்டும் முதன்மையுடையது கற்பு. ஆதலின், வேற்றவர்க்குத் தன் வீட்டார் விருந்தோம்பும் அமயம் என்று பாராதே, தலைவி விருந்திற் கலந்து கொள்ள மறுத்தாள். தன் பொருட்டு நடக்கும் இவ்வினிய விருந்து தனக்கு இனியதில்லை என்று காட்டினாள்.கற்பு காலமறிந்துதுணியும் என்பதற்கு இஃதோர் சான்று. , களவு நீடிப்பின், வெறியாட்டு நொதுமலர் வரைவு முதலான, பல தொல்லைகளுக்கு இடம் ஏற்படும் என வருவது அறிந்த அறிவுடைத் தோழி, களவென ஒன்று நடந்தது என்பது தோன்றா வகையில் மணத்தை முடித்துவைக்கப் பாடுபடுவாள். பல்வேறு வழிகளால் தலைவனை வற்புறுத்துவாள். இத்துறை வரைவுகடாவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/81&oldid=1238330" இலிருந்து மீள்விக்கப்பட்டது