பக்கம்:தமிழ்க் காதல்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

69



உயிரினும் சிறந்தன்று நானே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்று (தொல், 1058) 'நானத்தைக் காக்க உயிர்விடுக, கற்பைக் காக்க (உயிரோடு) நாணத்தை விடுக’ என்று தமிழ்த்துறை முற்றிய தொல்காப்பியர் தெளிவிப்பர். அறத்தொடு நிற்பது பெற்றோர்க்கு முன்பேயாயினும், அவ்வளவிற்கு நாணம் என்னும் அணியைக் கழற்றி வைக்க வேண்டுமாதலால், அறத்தொடு நில்லாவகை தோழி மண வினை முடிக்க முயல்வாள். களவுச் சுவடு படாமல், பல தீமைகள் தோன்றுவதற்கு முன்னரே தலைவன் வரைந்துகொள்ள வேண்டும் என்பது தோழியின் ஆசை. இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்ட தோழி, மலைநாடனே, இனி மணந்துகொண்டால் என்ன? மான் கூட்டமும்மிளகுக் கொடியும் படரும் மலைப்பகுதியில் நீ நிகழ்த்திய களவொழுக்கத்தை எம் சுற்றத்தார் அறியாரன்றே? அவர் அறியாத நிலையில், மரபு மணஞ் செய்து கொண்டுவிடுக. கொள்வையாயின், நின்னை முன்பின் அறியாதார்போல நாங்கள் நடந்துகொள்வோம்! இவளும் முதன் முதல் நின்னைக் காண்பவள் போல நாணம் அடைவாள்! அவள் பொய்யாக நாணிக் கோணி நிற்பதைக் கண்டு நாங்கள் மகிழ்வோம்: வரையின் எவனோ வான்தோய் வெற்ப கணக்கலை இகுக்கும் கறியிவர் சிலம்பின் மணப்பருங் காமம் புணர்ந்தமை யறியார் தொன்றியல் மரபின்மன்றல் அயரப் பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி நொதுமல் விருந்தினம் போலவிவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே (அகம். 112) என்று தன் ஆசையைச் சொல்லுதல் போல அறிவு சொல்லுதல் காண்க. அகத்திணை யிலக்கியத்துத் தோழி வரம்பற்ற உரிமை யுடையவள், தலைவியின் உரிமையையும் செயலையும் தன் உரிமையும் செயலுமாகக் கொள்ளும் உறவுடையவள். எனினும், தலைவியின் இசைவின்றி அறத்தோடு நிற்கும் உரிமை மட்டும் தோழிக்கு இல்லை. இவ்வரம்பை, அறததொடு நிற்கும் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப என்னும் தொல்காப்பியத்தால் (1151) அறிகின்றோம். ஏன்? அறத்தொடு நிற்பதால் நாணத்துக்கு இழுக்கு வரும். அந்நாண் இழுக்குக்கு உரியவள் தலைவி. கற்பின் பொருட்டு நாணக் குறைவு வரினும் வருக என்று துணியவேண்டியவள் அவள். அத் துணிவை அறிந்த பின்னரே தோழி அறத்தொடு நிற்றலை மேற்கொள்ள 95. Θ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/83&oldid=1238333" இலிருந்து மீள்விக்கப்பட்டது