பக்கம்:தமிழ்க் காதல்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

75


பொதுவாக அலசிக் கண்டோம். காணுங்கால், அல்ல.குறி (குறி மாறுபாட்டால் கூட்டமின்மை) வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் முதலான சிலபல துறைகளைத் தொடவில்லை. ஒரிடத்தே அனைத்தையும் சொல்லப் புகுதல் அறிவுக்குத் தொல்லைதருமன்றோ? ஈண்டுச் சொல்லிய சில துறைகள்கூடப் புலவோர்தம் அறிவுக் கொழுமுனைக்குத் தக்கபடி வேறும் வீறும் ஆன புனைவுகளைப் பெற்றுள. இவ்வெல்லாம் உரிய இடங்களில் விளக்க வேண்டுமவை. சங்கப்புலவோர் தொகை 473 அகத்திணைப்புலவோர் - 37.8 களவுத்திணை பாடியோர் --مهم.r 238 (இவர் கற்புத்திணையும் பாடியவர்) களவுத்திணைமட்டும் பாடியோர் --- 145 களவுத் திணைப்பாடல்கள் } --- 882 கபிலர் பாடியவை > – 182 அம்மூவனார் .82 بہ-ہ - ஒதலாந்தையார் b -- 38 பரணர் - - 33 உலோச்சனார். X- -- 27 கயமனார் - - 21 நக்கீரர் --- 17 நல்லுருத்திரனார் --- I6 மருதன் இளங்கீரனார் جہ ہم۔ I6 நல்லந்துவனார் -- 16 ஓரம்போகியார் * * , wevo 15 ° பேரிசாத்தனார் - – 14 களவுத்திணைக்கு மிகுந்த பாடற்கொடை நல்கிய பன்னிரு புலவர் பெருமக்களை மேலே காண்க. 4 களவுப் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் அறியோம். ஐந்திணை - கற்பியல் களவு ஒரு குறிக்கோள் அன்று முடிவான பயன் அன்று. ஒரு குறிக்கோளை, முடிந்த பயனை அடைவதற்கு உரிய நெறியேயாம். கற்பாக - திருமணமாக - முடியுங்கால், களவு நெறி நன்னெறி எனப் போற்றப்படும். இன்றேல் கள்ளத் தனம் என இகழப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/89&oldid=1238369" இலிருந்து மீள்விக்கப்பட்டது