பக்கம்:தமிழ்க் காதல்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்க் கொடை பதிப்புச்செம்மல் ச. மெய்யிப்பன் நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம் மூதறிஞர், பேராசிரியர் முனைவர் வ.சுப. மாணிக்கனார் தமிழ்செய்த தவப்பயன் தமிழ் தம் உயிருக்கு நேர் என்று வாழ்ந்த பேராசன்! தொல்காப்பியத்தை- சங்கத்தமிழை - வள்ளுவத்தை சிலம்பை-கம்பனை நெஞ்சுக்குநீதியாய்க் கொண்டவர். தமிழியம் அவர்தம் உயிர்நதி:தமிழ்வழிக் கல்விக்கு அவர்ஒரு பாசறை குறளின் சுடர் அகத்தினை ஆய்விற்கு விடிவெள்ளி அவர்நடையில் பாட்டும் தொகையும் பவனிவரும். தமிழில் மாத்திரை முதல் அடிநிலைவரை நோக்கிப் பார்க்கும் அவரது இலக்கியப்பார்வை விசாலமானது. தொல்காப்பியம் முதல் கவிஞர் வைரமுத்துவின் திரைஇசைக் கவிதைகள் வரை பார்த்தவர். படித்தவர். இலக்கிய - இலக்கண சமுத்திரங்களின் ஆழங்கண்டவர். ஒருபுறம் தொல்காப்பியத் புதுமை காண்பார் மறுபுறம் பாரதியிடம் பழமை காண்டார். இலக்கியங்களின் வித்து - விழுதுகள் - கிளைகள் விருட்சங்கள் எல்லாம் கண்டவர். சங்கஇலக்கியங்களின் பன்முகப் பெருமைகளைக் கண்டுணர்த்திய கலங்கரைவிளக்கு வள்ளுவ நெஞ்சத்தின் உயிர்ப்பறிந்து எழுதியவர்: மணிவாசகரின் மாணிக்க உள்ளம் கண்டவர். இராமபிரானின் தோள்கண்டான் கம்பன் என்றால். கம்பனின் தோள் கண்டார் வ.சுப. மாணிக்கனார். அவர் கூறினால், எழுதிக் காட்டினால் இளங்கோ தரிசனம் சாத்தனார் தரிசனம் கம்பதரிசனம். என்று தமிழின் தரிசனமே தெரியும்! அம்சொல் நுண்தேர்ச்சி, நுண்மாண் நுழைபுலம் இரவிவர்மனின் துரிகைச் சித்திரங்களாய் மாணிக்க எழுத்துகள் ஆழ அகலங்களை அதிகரித்துக் கொண்டே செல்லும் ஆய்வுநடை தமிழியமூச்சு..இவை எல்லாம்தாம் வ.சுப. மாணிக்கனார். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/9&oldid=879559" இலிருந்து மீள்விக்கப்பட்டது