பக்கம்:தமிழ்க் காதல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தமிழ்க் காதல்


ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல; பொன்னவிர் சுணங்கொடு செறிய iங்கிய மென்முலை முற்றம் கடவா தோரென, நள்ளென் கங்குலும் பகலும் இயைந்தியைந்து உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூரெரி ஆள்வினை மாரியின் அவியா நாளும் கடறுழந் திவணம் ஆக . . . (அகம். 279) நண்பினர் மிடியையும் உறவினர் துயரத்தையும் பகைவர்களின் எக்க ளிப்பையும் உள்ளூரில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பர்; அவர் யாரெனின், பொன்னிறச் சுணங்கும் திரட்சியும் வீக்கமும் மென்மையும் பொருந்திய முலைத் தடத்தை விட்டு அகலமாட்டா ஆடவர்கள். யான் இவ்வினத்தவன் ஆகிவிடுவேனோ என்ற அச்சத்தி யாமத்தும் பகலும் என் உள்ளத்தில் மூண்டது. மூண்ட நெருப்பை முயற்சி மழையால் அவித்தேன். பொருளின் பொருட்டு வீட்டை விட்டு இதோ காட்டில் நடக்கின்றேன். இவ்வாறு புலவர் இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் ஒரு தலைவன் தன் அகப்பூசலை மடித்துக் கடமைத் திட்பம் கொண்ட எண்ணவீற்றைப் புலப்படுத்துகின்றார். கவலையற்று மனையாளொடு இன்பந்துய்த்தல், பிறரிடம் சென்று இரவாமை, தன்னிடம் வந்து இரந்தார்க்கு இல்லை என்று சொல்லாமை, சுற்றத்தார்க்கு உதவுதல், நண்பர் கூட்டத்தைப் பெருக்கிக்கொள்ளல், தக்கவர் தொண்டுக்கு உறுதுணையாதல், பகைவர் செருக்கை அடக்கல், அடங்காரை அழித்தல், அடங்கி வந்தார்க்கும் தண்ணளி செய்தல், எண்ணிய வினை முடித்தல் என்றிவையெல்லாம் ஆடவனுக்கு உரிய கட்டுப்பாடுகளாம். மானவுணர்ச்சியும்புகழ்ப் பற்றும் இக் கடமைகளைச் செய் செய் என்று அவனைத் தூண்டும். இவற்றைச் செய்தற்குப் புதிய பொருட் காதல் வேண்டும். இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் அருளே காதலர் என்றி நீயே (அகம். 53) காதலர் காதல் மாறிவிட்டது எனவும், அதற்குக் காரணம் ஈகைப் பற்று எனவும் தலைமகளே கூறுதல் காண்க. நாடு காவற் பிரிவு, பகைவயிற் பிரிவு, துதிற்பிரிவு, ஒதற்பிரிவு, பரத்தையிற் பிரிவு எனப் பிரிவுவகைகள் பல. இவற்றினும் பொருள்வயிற் பிரிவே பரந்தது, எல்லோர்க்கும் உரியது, களவிற்கும் கற்பிற்கும் பொதுவாயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/94&oldid=1238368" இலிருந்து மீள்விக்கப்பட்டது