பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தமிழ்க் காப்பியங்கள்

வாகக் காணப்படுகின்றது. ஆங்கில நாடகக் காப்பியங் களில் பெரும்பாலானவை இம்முறையிலேயே அமைந் தன. புதுவது புனைந்த காப்பியங்கள் வடமொழியிலும் உண்டு. பாமஹரும்', ருத்ாடரும் அத்தகைய காப்பியங் கள் உண்மையைக் குறிப்பர். தமிழ் மொழியில் பிற்காலத்தில் அத்தகைய காப்பியங்கள் இயற்றப்பட வில்லை. ஆயினும் தொல்காப்பியர் காலத்தில் அத் தகைய செய்யுட்கள் இருந்தனவென்றே கொள்ளுதல் வேண்டும். -

புதுவது புனைந்த கதைகள் தமிழர்களுக்குப் புதியன அல்ல. சிறுகுரீஇயுரை, தந்திரவாக்கியம் முதலியவை புதியன புனைந்த உரைநடை நூல்கள். அவற்றைப் போலப் புதியன புனைந்த செய்யுள்நடை நூல்களும் முன்பு இருந்திருத்தல் ஏற்புடையதன்ருே? - -

சீவலமாறன் கதை முதலிய அரசர்கள் சரிதையைக் கூறும் காப்பியங்களை விருந்தென்னும் வகையில் அமைக்கலாம். இப்பொழுதுள்ளாரைப் பாடும் பாட்டு’ என்று யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் உரைப்பது இங்கே நினைத்தற்குரியது. இராஜராஜ விஜயம், வீரனுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை' என்னும் வரலாற்றுக் காப்பியங்கள் அவ்வக் காப்பியத் தலைவர்கள் காலத்தே பாடப்பெற்றவையாதலின் அவை விருந்தே யாகும்.

இயைபு தோல், தொன்மை, விருந்து என்பன மூன்றும் கதைச் செய்யுளாகிய காப்பியத்தின் வகைகளாதலை 1. i : 17. - . . . - 2. Dr. J. Nobel, Ph. D. Foundations of Indian Poetry and their Historical Development, p. 150-151. . . . - 3, தொல், செய்யுள், 113.பேர். 4. சாஸ்னத் தமிழ்க் கவி சரிதம், 74.