பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 83

அறிந்தோம். இனி, அடுத்த வனப்பு, இயைபு எனப் படுவது. -

‘ஞகாரை முதலா னகாரை யீற்றுப்

புள்ளி யிறுதி இயைபெணப் படுமே' என்பது அதன் இலக்கணச் சூத்திரம்.

'ஞண நமன யரலவழள வென்னும் பதிளுெருபுள்ளி யீற்றினுள் ஒன்றன. இறுதியாகச் செய்யும் செய்யுள் பொருட்டொடராகவும் சொற்ருெடராகவும் செய்வது இயைபெனப்படும் என்றவாறு. இயை பென்றதஞனே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வருமென்பது கருத்து; சீத்தலைச் சாத்தணு ராற் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்குவேளி ராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன: அவை னகார ஈற்ருன் இற்றன

என்பது பேராசிரியர் உரை.

இச் சூத்திரம் பொருட்டொடர் நிலையில் ஒவ்வொரு பாட்டின் இறுதியும் அமைந்த முறைபற்றி வகுக்கப் பட்டது. இப்பொழுது னகர ஈற்ருன் இற்ற காப்பியங் களே கிடைக்கின்றன. அவையும் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே எழுந்தன. இச் சூத்திரத்திற் கூறிய இலக்கணத்திற்கு இலக்கியம் அவர் காலத்திற்கு முன்னரே வழங்கியிருத்தல் வேண்டும். இக் கருத்தை உட்கொண்டே, மற்றை யீற்ருன் வருவனவற்றுக்கும் ஈண்டு இலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்ற வழிக் கொள்க; இப்பொழுது அவை வீழ்ந்தன போலும்’ என்று பேராசிரியரும், ஒழிந்த ஒற்றுக்களுக்கும்

1. தொல், செய்யுள். 240. - 2 மணிமேகலை னகர ஈற்ருல் இற்றதற்கு மாத்திரம் உதாரணம்.