பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் - 85

புலன்

அடுத்ததாகிய வனப்பு, புலன் என்பது. அதன் இலக்கணத்தை உரைக்கும் சூத்திரம் வருமாறு :

'சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலனென மொழிய புலனுணர்ந் தோரே.” இதன் உரையிற் பேராசிரியர், சேரி மொழி யென்பது, பாடி மாற்றங்கள். அவற்ருனே செவ்விதாகக் கூறி, ஆராய்ந்து காணுமைப் பொருட்டொடரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புல னுணர்ந்தோர் என்றவாறு. அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வனவென்பது கண்டு கொள்க' என்பர். திரிசொல் லின்றி எளிதாகச் செய்யப்படுவது புலனென் பது யாப்பருங்கலவிருத்தியாசிரியர் கொள்கை.

புலனென்பது வெளியென்னும் பொருளுடையது. புலப்படுதல்.வெளிப்படுதல் என்பது காண்க. தன்கட் கூறிய பொருள் வெளிப்படையாகத் தோன்றும்படி சேரி மொழியால் அமைவதுபற்றி இக் குறியீடு அமைந்தது போலும். ஆராய்ந்து காணுமைப் பொருட்டொடரானே' என்று பேராசிரியர் கூறுதல் காண்க. இப் புலனென்பது நாடகக் காப்பியங்களிலே பெரும்பாலும் அமைவது. இந்தச் சேரி மொழிகளையே பிற்காலத்தார் பாஷை யென்று வடமொழியைத் தழுவிக் கூறுவர். -

"உரையும் பாடையும் விரவியும் வருமே”

என்று காப்பிய இலக்கணத்திலும் இப்புலனுக்குரிய சேரி மொழியாகிய பாஷை வருதல் காண்க.

1. தொல். செய்யுள். 241, 2. தண்டியலிங்கரம்.