பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழ்க் காப்பியங்கள்

நாடகச் செய்யுளில் கூற்றுக்குரியாருக்கு ஏற்றவாறு: சொல் அமைய வேண்டிச் சேரிமொழி விரவ வேண்டும். வட நாடகக் காப்பியங்களில் பாக்தம் விரவி வருதலைப் போல இதனைக் கொள்ளுதல் பொருந்தும். -

இழைபு

எட்டாவது வனப்பாகிய இழைபு என்பது, 'இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்பர். ஆதலின் காப்பியச் செய்யுட்குரியதன்று அவ்விலக்கணம். .

இதுகாறும் கூறியவற்ருல் அம்மை, அழகு இழைபு என்னும் மூன்றினையும் ஒழித்து, ஏனைய வனப்புக்களுக் குரிய இலக்கணங்கள் காப்பியங்களோடு தொடர் புடையனவென்பதை அறியலாம். அவற்றுள் இயற் றமிழ்க் காப்பியங்களுக்கு நான்கு வனப்புக்களும், நாடகக் காப்பியங்களுக்கு ஒன்றும் கூறப்படுகின்றன. இது தொல்காப்பியத்தில் கண்ட காப்பிய வகை இலக்கணம்.

பிற்காலத்தில் வடமொழியிலக்கணம்பற்றி எழுந்த தமிழ் நூல்களில் பெருங்காப்பியம், காப்பியம் என்ற பிரிவு மாத்திரம் சொல்லப்பட்டன. அவற்றைப் பிறகு ஆராய்வோம்.

வண்ணங்கள்

காப்பியங்களில் உள்ள நடையை நெறியென்றும் மார்க்கமென்றும் கூறுவர். வீரசோழியமும் தண்டியலங் காரமும் இந்நெறியை வட நூலாகிய காவ்யாதர்சத்தைப் பின்பற்றி இரண்டாக்கி உரைக்கும். மாறனலங்காரம்

1. Diction or style.