பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் -- 87

மூன்றென்னும். காப்பியத்துக்கு அமைந்த அணிகள் குண அணி, பொருள் அணி, சொல்லணியென மூவகைப் படும். இவற்றில் குண அணியைக் காப்பியத்தின் நடையைக் குறிக்கும் இலக்கணமாகக் கொள்வர். அவற்றைக் காப்பியங்களின் ஆவியென்பர் வீர சோழியக்காரர்." - -

'வண்ண திரைநிறமா” என்பது வீர சோழியம்.

வண்ணங்கள் காப்பியமாகிய புருஷனுக்கு நிறம் போன்றன. அவை இருபது ஆகும். அவற்றைத் தொல் காப்பியனுர் செய்யுளியலிற் கூறுவர்.

'வண்ணந் தானே நாலைந் தென்ப’’’ என்னும் சூத்திர உரையில் பேராசிரியர், வண்ண மென்பது சந்த வேறுபாடு. நூல் பலவாகி வேறு படினும் அவை ஈண்டு அடங்குமென்பது உம், கூறிய வாறு. அது நுண்ணுணர்வுடையார்க்குப் புலன மென்பது என்பர். அதனுல் வண்ணங்கள் காப்பியங் களில் உள்ள செய்யுட்களின் ஒசை பற்றியனவென்று புலனுகும். இவற்றைக் குண அலங்காரங்களோடு சேர்த்து எண்ணுதல் தகும். உடம்பின் நிறத்தைப் போலச் சொல்லின் ஓசை குறித்து நிற்றலின் காப்பியத்தின் குணமாதல் காண்க. மாறனலங்கார உரையாசிரியர் குணவலங்காரங்களைக் கூறும் பொதுவியலின் ஈற்றில், செய்யுட் குணவலங்காரங்களுக்கு ஒழிபு கூறும் வாயிலாக, வண்ணங்கள் அவர் கூறும் மூன்று நெறியார்க்கும் வேறு வேளுகுமென்றும், சில பொதுவாவனவும் உள வென்றும் கூறிப் போந்தார்.” -

. அலங்காரப் படலம், 6. 2. தொல், செய்யுள். 212. 3. மாறனலங்கர ரம், 85, உரை. - -