பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழ்க் காப்பியங்கள்

அன்றியும், வண்ண இலக்கணங்களிற் சில, குணவணிகளின் இலக்கணங்களோடு ஒத்து நடக் கின்றன. அவை தமிழில் வண்ணமெனத் தொன்று தொட்டு வழங்குகின்றன. ஆயினும் வட நூலார் இலக்கணம்பற்றி அவற்றைக் குணமென்று கொள்ளு தலும் பொருந்தும். யாப்பருங்கல உரையில் வண்ணங் கூறிப் பின் வழுவை உரைப்பர். அணியிலக்கணங் களிலும் பிற நூலிலும் குணம் கூறிக் குற்றம் உரைத்தல் மரபு: ஆதலின் வண்ணமும் செய்யுளின் குணமெனக் கொண்டு அதனை முற்கூறிப் பின் குற்றம் கூறினர் போலும். - .

தொல்காப்பியத்தில் பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒருஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என இருபது வண்ணங்கள் சொல்லப்பட்டன.

இவற்றுள் சில வடமொழி நூலார் கூறும் குணவலங் காரங்கள் ஆதலை ஆராய்வோம்.

1. வல்லிசை வண்ணம்: இது வல்லெழுத்துப் பயின்று வருவது. இது, கெளட நெறியார்கூறும் செறிவு என்னும் குணவலங்காரமாகும். வல்லின வண்ணத்தால் வல்லெழுத்துச் செறிந்த சொல்லோடும் வற்கெனத் தொடுப்பதே வேண்டுவர் கெளடர்' என்ருர் மாற. னலங்கார உரையாசிரியர். இவ்வல்லிசை வண்ணம்,

1. மாறன். உதா. 88, உரை.