பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 89.

தோற்கயிறும் இரும்பும் திரித்தாற் போலவும், கல்மேற் கல்லுருட்டிற்ை போலவும் வருவது' என்பர்.

2. மெல்லிசை வண்ணம் : இது மெல்லெழுத்துப் பயின்று வருவது. இது வைதருப்ப நெறியார் கூறும் செறிவென்னும் குணவணி யாகும். இது, வைதருப்பச் செறிவு. என்ன? மெல்லினமாகிய எழுத்துச் செறிய மெல்லின வண்ணமுற்று அவ்வெழுத்தான் ஆய சொற்கள் செறியச் செறித்தமையின் எனக் கொள்க’ என்பது காண்க. இவ்வண்ணம் அன்ன நடையும் தண்ணம் பறையும் போலவும், மண்மேல் நடந்தாற் போலவும் வருவது." -

3. இயைபு வண்ணம் : இடையெழுத்துமிக்கு வருதல் இவ்வண்ணமாகும். இவ்வண்ணத்தைப் பாஞ்சால' நெறியார் கூறும் செறிவு என்னும் குணவலங்காரமாகக் குறிப்பர். இது பாஞ்சாலச் செறிவு. என்ன? இடை யினமாகிய எழுத்து மிகவும் செறிய, இயைபு வண்ண. மும் உற்று அவ்வெழுத்தாயை சொற்செறிய வந்தமை யானெனக் கொள்க' என்பர் மாறனலங்கார உரை

யாசிரியர். -

4. ஒழுகு வண்ணம் : ஒழுகிய லோசையாற் செல் வது ஒழுகு வண்ணம். ஒழுகிய லோசையாவது வெறுத் திசையின்றி அவ்வச் செய்யுட்கேற்ற சொல் நடையாகும் ஒழுகிசை யென்னும் குணவலங்காரம் ஒன்று உண்டு." அது இவ்வொழுகு வண்ணமே போலும். அதனை இன் னிசை யென்றும் கூறுவர். இன்னுவிசையாவது மெள் னடை யொழுக்கத்து வல்லொற்றடுத்து மிக்கது போலவும், - -

யா. வி. ப. 393. 2. த்ொல். செய்யுள். 217. மாறன் உதா. 88, உரை. 4. பா. வி. ப. 393. - தொல். செய்யுள். 218. 6. மசறன். உதா. 90. உரை. தொல். செய்யுள். 226. 8. தண்டி, 20.

மசறன். 83. -