பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தமிழ்க் காப்பியங்கள்

அந்நடை யொழுக்கத்து உயிரெழுத்தடுத்துப் பொய்ந் நலம் பட்டு அறுத்திசைப்பது போலவும் வரும். இன்னிசை அங்ங்னம் வாராது. இவ்வொழுகு வண்ணம் நீரொழுக்கும் காற்ருெழுக்கும் போல வருவது.' - 5. ஒரூஉ வண்ணம் : "ஒருஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என்பது இதன் இலக்கணம். பேராசிரியர், 'யாற்ருெழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறிதொன் றனே அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉ வண்ணம்’ என உரையமைத்தார். குணவலங்காரங்களுள் ஒன்ருகிய உய்த்தலில் பொருண்மையின் இலக்கணத்தை, -

'கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்

குரியசொல் லுடைய துய்த்தலில் பொருண்மை’ என்று தண்டியாசிரியர் கூறினர். அதன் உரையில் உரையாசிரியர், கவி தன்னுற் கருதப்பட்ட பொருளை விளங்க விரிக்கும் சொல்லைச் செய்யுளுள்ளே உடைத் தாய்ப் பிறிதுமொழி கூட்டி உரைக்கும் பெற்றியின்றி வரத் தொடுப்பது என்பர். ஒருஉ வண்ணத்தின் இலக்கண மும், உய்த்தலில் பொருண்மையின் இலக்கணமும் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. அதல்ை இவ்விரண்டும் ஒன்றென்றேனும் ஓரினமென்றேனும் கொள்ளுதலிற் பிழையேதும் இல்லை. -

இவற்ருல், தொல்காப்பியனர் கூறிய வண்ணங் களுள் ஐந்து வட நூலாளர் கூறும் குணவணிகளாதலை அறியலாகும். எனவே, இவ்வைந்து அல்லாத வண்ணங் கள் பிறவும் குணவலங்காரங்களுக்கு இனமென்றே கூறுதல் தகும். -

தொல்காப்பியனர் கூறிய இருபது வண்ணங்களையே கையனர் என்பாரும் கூறினர். அவினயனர் நூறு

T வி. ப. 353. T2. தெ. செப்புள் 25.

3· #, sürıq-, 22. 4. யா. வி. ப. 389.