பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 91

வண்ணங்கள் வகுத்து இலக்கணம் கூறினரென்று தெரிய வருகிறது.'

குற்றமும் குணமும்

சொல்லதிகாரத்திற் பொதுப்பட எழுவகை வழு வைத் தொல்காப்பியர் அமைத்தார். அவ்வழு வினின்றும் நீங்கிச் செய்யுள் இயல வேண்டும். மரபியலில் இலக்கண நூற் குற்றம் பத்துக் கூறி அவற்றின் எதிர்மறையாகி யவற்றைக் குணம் என்று அமைத்தார். அவை அதிகாரம் நோக்கி இலக்கண நூலிற்கு உரியனவாகச் சொல்லப்படினும் காப்பியங்களுக்கும் உரியனவென்பது முன்னர்க் கூறப்பட்டது. குற்றங்களைப்பற்றிய சூத்திர உரையிற் பேராசிரியர், ஒழிந்த செய்யுட்காயின் இவை அனைத்தும் ஆகாவென்பது ஈண்டே தழாஅல் வேண்டும்" என்று அக்குற்றங்கள் தொடர்நிலைச் செய்யுள் முதலியவற்றிலும் விலக்குதல் வேண்டு மென்பதைப் புலப்படுத்தினர்.

தொல்காப்பியனுர் கூறிய குற்றங்களாவன கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூற்ல், பொருளில் மொழிதல், மயங்கக் கூறல், ! கேட்போர்க்கின்னு யாப்ஜிற்குதல், பழித்த மொழியான் இழுக்கங் கூறல், தன்னுன் ஒரு பொருள் கருதிக் கூறல், என்ன வகையினும் மனங்கோளின்மை என்பனவாம். உரையில் பேராசிரியர், வெற்றெனத் தொடுத்தல், மற்ருென்று விரித்தல், சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மை என நான்கை உடன் கூட்டியமைப்பர். பிற்காலத்து நூலாசிரியர் இப்பதின்ைகிற் சிலவற்றை விடுத்துப் பத்துக் குற்றங்களைக் கொண்டனர். குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறு

1. யா, வி. ப. 389. 2. தொல். மரபு.108, உரை.