பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பூரீ வித்வான்.கி. வா. ஜகந்நாதையர், சென்னை ஸ்ர்வ கலாசாலையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த காலத்தில் அவருடைய வேலையைக் கவனிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. அவருடைய பேருழைப்பின் பயணுக வெளி வந்துள்ள தமிழ்க் காப்பியங்கள் என்னும் இக்கட்டுரை பல துறைகளில் சிறப்புற்று விளங்குகின்றது.

அவ்வப்போது விஷயங்களைக் கேட்டு வந்த எனக்கு எல்லாவற்றையும் ஒருங்கே இவ் வடிவத்திற் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. -

வடமொழி யலங்கார சாஸ்திரங்களிலும் ஆங்கில நூல்களிலும் உள்ள அருமையான விஷயங்கள் இந்நூலில் ஆங்காங்கு ஒப்புமை யாகக் காட்டப்பட்டுள்ளன. -

தொல்காப்பியம், யாப்பருங்கல விருத்தி, வீரசோழியம் முதலிய அநேக நூல்களில் காப் பிய இலக்கணங்களைப்பற்றி ஒவ்வோரிடத்தில் காணப்படும் விஷயங்களையெல்லாம் நன்கு ஆராய்ந்து ஒழுங்குபடுத்தி இக்கட்டுரையில் தொகுத்தமைத்திருப்பது புலவர் பெருமக்க ளால் மிகவும் பாராட்டத்தக்கது.