பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. தமிழ்க் காப்பியங்கள்

கொளக் கூறல், வழுஉச் சொற் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மற்ருென்று விரித்தல், சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மை யென்னும் இப்பத்துமே பிற்காலத்தில் பெருவரவின வாகப் பயில்கின்றன.

வடமொழியலங்கார நூல்களுள் காப்பியக் குற்றங் கள் இவை யென்று கூறுதல் வழக்கு. அலங்கார இலக்கணம் கூறுவனவற்றுட் பழைய தாகிய பரதருடைய நாட்டிய சாஸ்திரத்திலும் பத்து வகைக் குற்றங்கள் சொல்லப்படும். தண்டியலங்காரத்திலும் மாறனலங்கா ரத்திலும் ஒன்பது வழுக்களைப்பற்றிய செய்திகள் உள்ளன. அவை பிரிபொருட் சொற்ருெடர், மாறுபடு பொருண்மொழி, மொழிந்தது மொழிவு, கவர்படு பொருண்மொழி, நிரனிறைவழு, சொல் வழு, யதிவழு, செய்யுள் வழு, சந்தி வழு என்னும் வழுக்களாகும். இவற்றில் பல தொல்காப்பியத்திலும் பிற நூல்களிலும் சொல்லப்பட்ட குற்றங்களாதலைக் காண்க. இவ் வழுக்களை வழுவணி யென்று மாறனலங்கார உரை யாசிரியர் உணர்த்துவர்.” -

இவற்றையன்றி இட மலைவு, கால மலைவு, கலை மலைவு, உலக மலைவு, நியாய மலைவு, ஆகம மலைவு என்னும் ஆறும் காப்பியங்களில் களைவதற்குரியன வென்று தண்டியாசிரியர் கூறுவர். இவையனைத்தும் தொல்காப்பியர் கூறும் மரபுவழுவின் பாற்படும்.

மேற்கூறிய வழுக்கள் சில இடங்களில் அமைதி பெற்று வழுவமைதி யென்னும் பெயர் பெறும். இது தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களிலும் அணி யிலக்கணங்களிலும் உண்டு.

1. யா. வி. ப. 13. 2. அத்தியாயம். 18. 3. மாறன். 300 உரை: