பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தமிழ்க் காப்பியங்கள்

உவமை அளவையும் அணியும்

இனி, தொல்காப்பியத்தால் அறிந்த காப்பியப்

பொருளணிகளைப்பற்றி ஆராய்வோம். .

உவம இயல் உவமைகளைப்பற்றிய செய்திகளைக்

கூறுகின்றது. .

உவமை யென்பது பொருள் புலப்படுதற்குப் பயன்

படுவது. .

'உவமத்தானும் பொருள் புல்ப்பாடே கூறுகின்ரு தைலின். எங்ங்னமோவெனின், ஆ போலும் ஆமா என்றக்கால், ஆமா கண்டறியாதான்காட்டுட் சென்ற வழி அதனைக் கண்டால் ஆ போலும் என்னும் உவமையேபற்றி ஆமா இதுவென்று அறியுமாகலா னென்பது'

என்று பேராசிரியர் உரைப்பர்.

இலக்கியச் சுவ்ை கருதி அமைக்கப்படும் உவமை அணிக்கு இவ்வாறு பயன் கூறுதல் பொருத்தமாகத் தோற்றவில்லை. . -

உவமையென்பது உபமானம், உபமா என்பவற் றின் திரிபாகும். வடமொழியில் உவமை அளவையாக வும்அணியாகவும் வகுக்கப்படுகின்றது. உவமை அளவை யாகும்போது அது பொருளின் இயல்பை மிக அணித்தாக எடுத்துக் கூறுவதென்பர். யாஸ்கர் தம்முடைய நிருத் தத்திலும், பதஞ்சலி தம்முடைய மகா பாஷ்யத்திலும் உவமையைப்பற்றிய செய்திகளை அமைத்துள்ளா ரென்பர். தருக்க நூலார் உவமையளவையைப் பலபடி யாக விரித்துரைப்பர். அவர்கள், தெரிந்த பொருளை உவமை யாக்கித் தெரியாத பொருளைப் புலப்படுத்த

1. தொல். உவம. 1. உரை. 2. சாமீப்ய மானம் உபமானம்'