பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 95.

அது பயன்படுமென்று கூறுவர். மகா பாஷ்யத்திலும் தருக்க நூல்களிலும் ஆ போலும் ஆமா என்ற உதாரணமே காட்டப்பட்டிருக்கின்றது. இது கருதியே பேராசிரியர் முற்கூறியவாறு எழுதினர் போலும். அவர் கூற்று உவமையளவைக்கே பெரும்பாலும் இயை புடைத்தாகும். -

உவமையணி கவிதையின் அழகுக்குக் காரன ம்ாகும். தொல்காப்பியனர் உவமையை அணியென் னும் பெயரால் குறிக்கவில்லை. அகத்திணையியலில்,

'உள்ளுறை உவமம் ஏனே உவமமெனத் தள்ளா தாகும் திணையுணர் வகையே’’’

எனக் கூறிப் பின்னும் சில சூத்திரங்களை அமைத்தார். அங்கே கூறிய உள்ளுறை யுவமம் ஏனை உவமம் இரண்டனையும் உவம இயலில் விரித்தார். அகமென்றும் புறமென்றும் வகுத்த செய்யுட் பொருளை அழகுறுத்த வந்தவை அவ்வுவமங்கள் என்பதை உணரும்படி இலக்கணம் அமைக்கிருர். -

அவர் கூறிச் செல்லும் முறையை நோக்க, அவர் உவமையை அணியாகவே கொண்டனரெனத் தோற்று கின்றது. பிற்காலத்தில் பலவகையாகப் பிரிந்த அணி களிற் பலவற்றை அவர் கூறும் இலக்கணங்களில் அடக்கிக் காட்டலாம்.

காப்பியங்களுக்கு அழகைக் கொடுக்கும் அலங்காரங் களுள் தலை சிறந்தது. உவமை. அப்பைய தீகூகிதர் தம்

1. மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் உவமையளவையைப்பற்றிய, "உவமம் ஆவது ஒப்புமை அளவை, கவய மாஆப் போலும் எனக் கருதல்’’ என்ற அடிகள் இங்கே அறிதற்குரியன.

2. சூ. 45.