பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழ்க் காப்பியங்கள்

எட்டாவனவும், மெய்ப்பாடு எட்டைேடு சேர்ந்து எட்டாவனவும் தொல்காப்பியத்தில் வகுக்கப்பட்டன.

இவற்றையன்றி, அவர் குறித்த சுட்டிக் கூரு வுவமம் என்பது தொகையுவமையில் அடங்கும். பொருளையே உவமம் செய்தல் ஒன்று; இது தண்டியார் கூறும் விபரீத வுவமையாகும்.' -

"ஒரீஇக் கூறலு மtஇய பண்பே'

என்பது ஒரு சூத்திரம். ஒக்குமெனக் கூருது ஒவ்வா தெனக் கூறுதலும் உவமையாகும். மாறனலங்கார లిL 50F காரர். இதனைக் குறைவுவமையென்பதில் அடக்குவர். தடு மாறுவமம் என்பது ஒன்று. இது உவமையைப் பொரு ளாக்கியும் பொருளை உவமமாக்கியும் தடுமாறச் சொல்லு தல். இதனை ஐயவுவமை, இதர விதரம் என்பவற்றின் பாற்படுத்துவர். நிரனிறையோடு வரும் நிரனிறை யுவமை என்பது ஒன்று. இவற்றையன்றி ஏனைய உவமை வகைகளைக் கொள்ளும் வழிக்கொள்க வென்று,

'வேறுபட வந்த உவமத் தோற்றம்

கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளா அல்'. என்னும் சூத்திர்த்தில் அமைக்கின்ருர். அச் சூத்திர உரையில் பேராசிரியர் வேறுபட வருதலை விரித்து, உவமைக்கும் பொருட்கும் ஒப்புமையா மாறுபடக் கூறுதல் முதலிய பதினுேருவமைகளை எடுத்துக்காட்டுவர். அவை தண்டியலங்காரம் முதலிய நூல்களிலுள்ள விரியுவமை முதலியனவற்றினுள் அடங்கும். -

1. மு. இராகவையங்கார், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப. 137.

2. தொல். உவம். 33. 3. மாறன். 95.

4. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப. 187.

5. தொல். உவம. 32. -