பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 99.

'பொருளே உவமம் செய்தனர் மொழியினும்” என்னும் சூத்திரத்தில், இவை உவமத்தொகை யாங்கால் முலைக்கோங்கம், முகத்தாமரை எனப்படும். இவற்றை உருவகமென்று பிறர் மயங்குப' என்பர் பேராசிரியர். அவர் பிறர் கூற்ருேடு உடம்படாவிடினும் அவர் கூறும் "பொருளை யுவமஞ் செய்த உவமத் தொகையே உரு வகத்துள் அடங்கும் என்ற ஒரு சாரார் கொள்கையை அறிகிருேம்.

'உவமத் தன்மையும் உரித்தென மொழிப' என்னும் சூத்திர உரையில், உவமத் தன்மையும் என்ற உம்மையான் உவமத்தன்மையே யன்றி வாளாது தன்மை கூறுதலும் எடுத்துரைக்கின்ருர். அது தன்மை யணியாகும்.

உவம உருபுகளின் வரையறை

உவம உருபுகளைத் தொல்காப்பியர் ஒரு சூத்தி ரத்தில் தொகுத்துக் கூறினர். அப்பால், வினையுவமம் முதலிய நான்கனுள் ஒவ்வொன்றனுக்கும் தனித்தனியே வரும் வரையறையுடையன இன்ன இன்ன வென்று அவற்றை வகுத்துரைப்பர். இவ்வரையறை தொல்காப்பி யத்துக்குப் பிற்காலத்தில் நீங்கியது. கடைச்சங்க காலத்து நூல்களிலேயே இவ்வரையறைக்குப்புறம்பாக உவம உருபுகள் வந்திருப்பதைக் காணலாம். இவை யெல்லாம் மரபுபற்றி அறிதல் வேண்டும். எனவே, தலைச்சங்கத்தார் முதலாயிஞர் செய்யுட்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தாமன்றே என்று பேரா சிரியர் கூறுதலால், இவ்வரையறை மிகப் பழங்காலத்தில் இருந்ததென்றும் கடைச்சங்க நூல்களில் இவ்வரையறை

1. தொல். உவம. 9, 2. டிெ. டிெ. 34.