பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 101

புதல்வன் ஈன்றவெம் முயங்கல் அதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே.'

(ஐங்குறுநூறு,65)

இது வினைபற்றி வந்த உள்ளுறையுவமம். தாமரை வினை விளைப்பதற்காக அல்லாமல் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியில் அத் தாமரை தானே விளைந்து சுரும்பி னுடைய பசியைத் தீர்க்கும் ஊரன்' என்றது, அது. போலக் காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்று அமைக்கப்பட்ட கோயிலுள் யாமும் உளமாகி இல்லறம் பூண்டு விருந்து ஒம்புகின்றனம்' என்னும் பொருளைக் குறிப்பாகத் தெரிவிக்கின்றது. இங்கே உவமவுருபேனும் உவமேயமேனும் கூறப்படவில்லை. ஆயினும் குறிப்பில்ை இப்பொருள் கொள்ளும்படி இது அமைந்துள்ளது. தாமரையானது சுரும்பின் பசியைக் களையும் தொழில், தலைவி விருந்தினரை ஒம்பும் தொழி லாகிய குறிப்பை உள்ளுறை பொருளாகப் பெற்ற உவம மாதலின் இது வினையுவமப் போலியாயிற்று. இப்படியே மற்றவைகளும் வரும்.

இங்ங்னம் குறிப்பாற் பொருள் கொள்ளும் முறை வடமொழியில் தொனியென்னும் அணியைப்பற்றிய இலக்கணத்திற் காணப்படும். ஒரு காப்பியத்துக்குத் தொனியே உயிர் என்பதும், தொனியைத் தலைமையாகக் கொண்டதே உத்தம காப்பியமென்பதும் சில வட நூலார் கொள்கை. அகத்திணை இயலிற் சொல்லப்படும் இறைச்சியும் குறிப்பால் பொருளுணர்த்துவதே யாகும். இவ்விரண்டையும் தனியே இரண்டு அலங்காரமாக்கி அமைத்தார் மாறனலங்கார ஆசிரியர்.

உள்ளுறை அகத்திணையில் பெரும்பாலும் வரும். இன்னர் இன்னர் கூற்றில் இன்ன முறையில் வர