பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தமிழ்க் காப்பியங்கள்

வேண்டுமென்பதைத் தொல்காப்பியனுர் சொல் கிஞர்." உள்ளுறையுவமம் இனிதுறு கிளவிபற்றியும் துனியுறு கிளவி பற்றியும் வரும். தெய்வம் ஒழிந்த கருப்பொருள் அடியாகப் பிறக்கும்.

அகப்பொருள் நூல் உரைகளில் உரையாசிரியர்கள் பல இடங்களில் உள்ளுறையுவமப் பொருளை விரித், துரைக்கின்றனர். 'மற்று இவையெல்லாம் அகப் பொருட்கே உரியவாக விதந்தோதியது என்னே, புறப் பொருட்கு வாராதன போல, எனின், ஆண்டு வருதல் அரிதாதலின் இவ்வாறு அகத்திற்கே கூறி ஆன் என்பது’’ என்ற பேராசிரியர் கூற்றினுல் இது புறப்பொருட்கண் வருதல் அருமை யென்று அறிகின்றுேம். ஆயினும் புறநானூற்று உரையாசிரியர், உள்ளுறையுவமத்தின் உள்ளுறையை அகப்பொருள் நூலில் உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுதல் போலச் சில செய்யுட்களில் கண்ட சில பகுதிகளுக்கு உள்ளுறை இதுவென்று காட்டு கின்ருர். அவற்றுள் ஒன்று வருமாறு:

"அறுமருப் பெழிற்கலே புலிப்பாற் பட்டெனச்

சிறுமறி தழி இய தெறிநடை மடப்பினே பூளே நீடிய வெருவரு பறந்தலே வேளை வெண்பூக் கறிக்கும் ஆளில் அத்த மாகிய கண்டே'

என்பதன் உள்ளுறையை உரைக்குமிடத்து உரையாசிரி பர், கலை புலிப்பாற் பட்டெனச் சிறு மறி தழி இய மடப் பினை பறந்தலை வேளை வெண்பூக் கறிக்குமென்பது, அவன் பகைவரைக் கொன்றவழி அவர் பெண்டிர் தம் இளம் புதல்வரை ஓம்புதற் பொருட்டு இறந்துபடாது

1. தொல் உவம. 26-31. 2. தொல், ட்வம.31. .ே புறநானு று, 23.