பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய @ಖಕಿಹ.ಐಶT ங்கள் 105

காப்பியத்தின் உயிரென்ற கொள்கை உண்டாகி வேரூன் நியது. இதற்கு முதலில் அடிகோலியவர் த்வன்யாலோக ஆசிரியர். அவருக்குப் பின்னே அலங்கார நூல்களில் தனியே ரஸத்தைப்பற்றி விரிவாக உரைக்கத் தொடங் கினர். ரஸ் சம்பந்தமான இலக்கணத்தைக் கூறுவதற் காகவே ரஸ் கங்காதரம், ரஸ் தரங்கிணி, ரஸ் மஞ்சரி முதலிய நூல்கள் எழுந்தன. இவை பிற்காலத்தில் எழுந்த நூல்களாகும். r

பல நூற்ருண்டுகளுக்கு முன்னரே சுவையைப் பற்றிய ஆராய்ச்சி தமிழ் நாட்டில் இருந்ததென்பதற்குத் தொல் காப்பியத்து மெய்ப்பாட்டியலே போதிய சான்ருகும். -

நாடகச் சுவை

தொல்காப்பியர் முதலில் நாடகச் சுவைகளைப் பற்றிச் சொல்கின்ருர். அவை எட்டென்றும், ஒவ்வொன் றும் நந்நான்காகப் பிரிந்து முப்பத்திரண்டு பாவங் களாகும் என்றும், அவை பதினுறனுள் அடங்கும் என்றும் உணர்த்துகின்ருர். -

"பண்ணைத் தோன்றிய எண்ணுன்கு பொருளும்

கண்ணிய புறனே நானுன் கென்ப" -

என்பது சூத்திரம். இம் முப்பத்திரண்டும் பதினறுள் அடங்குவதற்கு வகை உரையாசிரியர் விரித்துரைக்கிருர்.

நாடகத்துக்குரிய சுவை எட்டென்பதனைத் தொல் காப்பியர் குறிக்கின்ருர். பேராசிரியர் உருத்திரம் ஒழிந்த

எட்டை நாடகச் சுவை யென்பர். -

'உருத்திரத் தன்னே டொன்ப தாகும்’

என ஒரு சூத்திரத்தையும் அவர் காட்டுகின்றர். வட மொழியில் உள்ள பரதர் நாடக இலக்கணத்தில்

1. தொல். மெப்ப்பாடு. 3.